Jayakanthan Quotes

We've searched our database for all the quotes and captions related to Jayakanthan. Here they are! All 47 of them:

வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை.
Jayakanthan (Sila Nerangalil Sila Manithargal (Tamil Edition))
The writer should have a comprehensive outlook. He should aim at a holistic understanding of the prevailing social, political and economic conditions. He should evaluate all factors in a balanced way. To take a selective view will be erroneous. A realistic approach becomes necessary. This requires healthy literary criticism and exchange of views. A writer should necessarily venture into his enterprise by touching on a single issue. But then he should relate it to other socially relevant issues. This is what we call the socio-spiritual approach. You may begin your work dwelling upon the problems of an individual, but then as a writer you should be able to view it as part of the larger social reality.
Jayakanthan
சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்…!
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
எவ்வளவுதான் மகத்தான ஞானிகள், யோகிகள், மேதைகள், கலைஞர்களாயினும் சரி, வாழ்க்கைதான் அவர்களை உருவாக்குகிறதேயல்லாமல் வாழ்க்கையை, அவர்களது சொந்த வாழ்க்கையைக்கூட- அவர்களால் உருவாக்க முடிவதில்லை.
Jayakanthan (Parisukkup Po! (Tamil))
போகுது,
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்.
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம்
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
குழந்தைகள் மட்டும்தானா? இந்தப் பறவைகள், மிருகங்கள், வண்ணாத்திப் பூச்சிகள், தேனீக்கள், மலர்கள், செடி கொடி எல்லாமே சந்தோஷமாக மட்டும்தான் இருக்கின்றன
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
ஒரு செடியைப் பாதுகாக்கறதும் தண்ணி ஊத்தறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே.
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு. நாடுவது என்னவென்பதே முக்கியம்.
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
மிருகங்களுக்கும் மற்றவங்களுக்கும் சமூக வளர்ச்சி, வாழ்க்கைப் பிரச்னைகள், தார்மீகப் பொறுப்புகள் ஒன்றும் கிடையாது. மனிதன் அப்படி ஆகக்கூடுமா என்ன? அப்படி ஆனால் அது சரியும் ஆகாதே. பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையில் வளர்ச்சி ஏது
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
Shouldn’t I play my allotted role in real life with the same involvement? That is why, even though I knew that Pattu and Damu were going to suffer, I played my assigned role and agreed to their marriage. Tomorrow, she may land up here with tears in her eyes. At that point, our role will be to give her a helping hand. I am preparing myself right now to provide unstinting support to her as a matter of duty.
D. Jayakanthan (Once an Actress)
இழைக்கின்ற விதி முன்செல்ல, தருமம் பின் இரங்கி ஏகுவதே போல்,
Jayakanthan (ஹர ஹர சங்கர... [Hara Hara Sankara...])
இல்லாதது எது?
Jayakanthan (ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1])
எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னா நாம்ப மனசாலே சின்னக் குழந்தையாயிருக்கணும்னு தெரியுது. சின்னப் பசங்களா இருந்தப்போ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எவ்வளவு ஆச்சரியமா இருந்திச்சு?
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
மணிலாக் கொட்டைங்கறதுதான் மல்லாக்கொட்டைன்னு ‘கலோக்கிய’லா ஆயிடுச்சு. இது தென்னாப்பரிக்காவிலேருந்து இங்கே வந்திருக்கணும். மணிலாவிலேருந்து வந்ததனால் மணிலாக்கொட்டைன்னு பேரு
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
வாழ்க்கையிலே துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்கிறவர்கள்தான் ரொம்பக் குறைவு. அந்தக குறைவானவர்களில் நீங்கள் ஒருவர்…
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
மனிதனின் சகல சோகங்களுக்கும் வித்தான பிறவியெனும் பெருஞ்சிலுவையைத் தோளில் சுமந்து நிற்பவன் போன்று-தேகாந்தமும் குலுங்கி நடுங்க ஒரு துர்த்தேவதையின் பலிபீடத்தில் நிற்பவனைப் போல் நின்று அவள் முன்னே வேதனைகளை உள்ளடக்கி மரத்துப் போய்க் கரகரக்கும் குரலில்
Jayakanthan (உன்னைப் போல் ஒருவன் [unnai pol oruvan])
இந்த உலகத்தில் எது மாறாமல் இருக்கிறது? மாறாதிருப்பது, உயிரற்றிருப்பதின் அடையாளம்!
Jayakanthan (ஹர ஹர சங்கர... [Hara Hara Sankara...])
சுயவிமரிசனம் உடையோரை, பிற விமரிசனங்கள் பாதிப்பதில்லை.
Jayakanthan (ஹர ஹர சங்கர... [Hara Hara Sankara...])
பாக்காத ஒறவும், கேக்காத கடனும் பாழாப் பூடும்னு சொல்லுவாங்க.
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])
இருந்தான். அவன் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவன் மாதிரி விழித்தானே அல்லாமல், ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டானில்லை. அவன் அந்தச் சிவன் கோயில் வாழ்ந்து வந்தான். அதற்குக் காரணம் பக்தி அல்ல; அங்கேதான் அவனுக்கு இடம் கிடைத்தது. கோயில் குருக்கள் அவனுக்கு மடப்பள்ளியிருந்து உணவு தந்தார். அதற்குப் பதிலாய் அவனிடம் வேலை வாங்கிக் கொண்டார். கோயின் பக்கத்திலுள்ள நந்தவனப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் சில சமயங்களில் பூப் பறித்துக் கொண்டு வருவதும் அவனுக்கு அவரிட்ட பணிகள். அரையில் ஒரு துண்டும். நெஞ்சுக்குழி வரை அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடும் அவனது தீட்சண்யமான பார்வையும் – கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது. பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர் எனினும். அவன் சோம்பேறி அல்ல. சாமியார் என்ற பட்டம் பெற்ற பிறகும் கூட அவன் நாள் முழுவதும் ஏதோ ஒரு வேலையை யாருக்கோ செய்து கொண்டிருக்கிறான். வேலையின் தன்மைகளோ அது உயர்வா, தாழ்வா என்றபாகுபாடோ அவனுக்கு ஒரு பொருட்டல்ல. செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான். மடப்பள்ளிக்கு விறகு பிளந்து போடுவான். கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான்; குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பான். செட்டியார் வீட்டுக்கு…. எள் மூட்டை சுமப்பான்; பட்டாளத்துப் பிள்ளை வீட்டு வண்டியில் ஏறிப்போய் நெல் அரைத்துக்கொண்டு வருவான். அவன் எல்லாருக்கும் தொண்டன்….. ஒரு வேளை பிறவியின் அர்த்தமே இந்தப் பயன் கருதாத் தொண்டில் அவனுக்குக் கிட்டுகிறதோ என்னவோ?
Jayakanthan (ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 4)
நான் போய்விட்டால், அதனால் அந்தக் குழந்தைக்கு ஒரு தாய் இல்லாமல் போய்விடுவாளா? ஐயோ! அது தாயில்லாக் குழந்தையாய் இருக்கக் கூடாதா! ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை இப்படிக் கேள்வி முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன நியாயம்?.. சீசீ! கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் - இந்த யமன் தான்... யமனை உண்டாக்கினது யாரு? அவன் இப்படி அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு? அந்தக் கடவுளே பத்து மாசம் சொமந்து பெத்திருந்தாத் தெரியும்... எப்படித்தான் தாங்கப் போவுதோ அந்தப் பெத்த வயிறு... மனுசன் சாகறது பெரிய சோகமில்லே; அதைப் பாத்து மத்தவங்க துடிக்கிற கோலமிருக்கே... அட கடவுளே!
Jayakanthan (ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 3 [Jayakanthan Short Stories Collection - Part 3 ])
வாழ்வும் தாழ்வும், பெருமையும் வீழ்ச்சியும், மகிழ்ச்சியும் துயரமும் நாயின் வாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும் போலும்!
Jayakanthan (ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 3 [Jayakanthan Short Stories Collection - Part 3 ])
மனிதன் பணத்தினால் எவ்வளவு சீக்கிரம் 'தன்நிலை மாறிவிட முடிகிறது. குடிக்கிறதனாலே மனுசனுக்குத் தன் நிலை' மாறிடும்னு சொல்லறாங்களே - இந்தப் பணம் மாத்தறதை விடவா அது மனுஷன் நிலையை மாத்திடுது?
Jayakanthan (Yaarukkaga Azhuthan?)
வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான்... ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்...
Jayakanthan (Yaarukkaga Azhuthan?)
இதிலே சந்தோஷம் இருக்கறதாக நினைச்சுண்டு குடிக்கிறதே ஒரு மயக்கம்னு எனக்குத் தோண்றது. மனுஷ உடம்பு இதை ஏத்துக்க மாட்டேன்னு 'ரிவோல்ட்' பண்ற மாதிரி என்னமாப் போராடறது! மனுஷா அதை சோடாவை ஊத்தி, ஐஸைப் போட்டு, காரமாகவும் இனிப்பாகவும் தின்பண்டங்களையெல்லாம் வச்சுண்டு இந்த உடம்பை தாஜா பண்ணி தாஜா பண்ணி அதை உள்ளே தள்ளிக்கிறார்.
Jayakanthan (Sila Nerangalil Sila Manithargal (Tamil Edition))
பட்டுப்
Jayakanthan (Gangai Engey Pogiraal? (Tamil Edition))
அவா நதி மூலமும் பாக்கறில்லே; ரிஷி மூலமும் பாக்கறதில்லை.
Jayakanthan (Rishi Moolam (Tamil Edition))
சில சமயத்திலே ரயிலடி பிளாட்பாரத்திலே மணி அடிக்கிற சப்தம் கேட்கும். அந்த மணிச் சத்தம் எண்ணைக் கூப்பிடற மாதிரி இருக்கும். கொஞ்ச நாழிக்கப்பறம் ரயில் வரும். அது எனக்காகவே வந்து காத்துண்டிருக்கிற மாதிரி நிற்கும். நான் வரலியேன்னு பெருமூச்சு விட்டுண்டு புறப்படற மாதிரி அந்த ரயில் சத்தம் எனக்குத் தோணும்.
Jayakanthan (Rishi Moolam (Tamil Edition))
யார் யாருக்காகவோ எதை எதையோ சுமந்துண்டு, காலத்துக்கு உழைத்துத் தேஞ்சிண்டு, தனக்குத் தானே துரோகம் இழைச்சுக்கிறதை ஒரு தியாகம்னு நெனைச்சுண்டு சந்தோஷம் எங்கே எங்கேன்னு அலைஞ்சு அலைஞ்சு வடுப்பட்டு, சலிப்படைஞ்சு போறவாள்ளாம் ஒண்ணு சேந்துண்டு ஒரு சுமையுமில்லாமல் வெட்ட வெளியிலே எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சுட்டு நிக்கிற இவனைப் பாத்து, எந்தச் சுமையையும் ஒடம்பிலே ஏத்திக்காத சுயநலமியான, போகிகளிலே போகியான இவனைப் பார்த்துப் பரிதாபப்படறதும் கண்கலங்கறதும், பக்தி செய்யறதும் பார்க்கப் பார்க்க எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வரதே.
Jayakanthan (Rishi Moolam (Tamil Edition))
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of  electronic texts of tamil literary works and to distribute
Jayakanthan (ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1])
கனகசபையின் இறந்த காலம் பையனின் நிகழ்காலம்.
Jayakanthan (Yaarukkaga Azhuthan?)
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் என்ற நம்பிக்கை தான் அவசியம்.
Jayakanthan (அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...])
பெண்கள் தாமே தமது உருவ அழகில் மயங்கி, தன்னை ஒரு மோகினியாக நினைத்துக் கொண்டு, அசட்டுத்தனமான கற்பனைகளில் சிக்கி, ஆண்களைத் தம்மை ஆளத் தகுந்த எஜமானர்களாக ஆக்கி அடிமைப்படுவதைத்தான் நடைமுறை வாழ்வில் நிறையவே பார்க்கிறோம்.
Jayakanthan (அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...])
பிடிக்கிற விஷயம் பிடிக்காத விஷயம், ரசித்து மேன்மைப்படுகிற விஷயம் அருவருத்து மனம் குமட்டுகிற விஷயம் என்கிற பேதங்கள் தான் உண்டு.
Jayakanthan (இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் [Idhaya Raanigalum Spade Rajakkalum])
எந்த வாழ்க்கையையும் அதன் முழுமையான அர்த்தத்தோடு வாழ்வது தவிர, மற்ற ஈடுகட்டும் முறைகள் எதுவானாலும் ஒரு வகை ஒழுக்கக் கேடாகவே தோன்றுகிறது.
Jayakanthan (Oru Nadikai Naadakam Parkiral (Tamil))
நீங்க நாடகம் பார்க்கறமாதிரி நான் வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்… ‘நாடகமே உலகம்’ ‘வாழ்க்கையே நாடகம்’னு
Jayakanthan (Oru Nadikai Naadakam Parkiral (Tamil))
நீ என்கிட்டே எதையாவது எதிர்பார்க்கணும்னு நான் எதிர்பார்த்தேன்…
Jayakanthan (Oru Nadikai Naadakam Parkiral (Tamil))
இந்த ஹாலிலே இந்த ஆபீஸின் இயக்கத்தை - இதன் மும்முரத்தைப் பார்க்கறச்சே - ரொம்ப மெக்கானிகலா - ஒரு கடிகாரத்தைத் திறந்து பார்த்த மாதிரி இருக்கு.
Jayakanthan (Sila Nerangalil Sila Manithargal (Tamil Edition))
இரண்டு பேருக்கும் நடுவிலே இந்த மெளனம் ஒரு சம்பாஷணை மாதிரி நீடிக்கிறது. 'டக்'னு
Jayakanthan (Sila Nerangalil Sila Manithargal (Tamil Edition))
பெரிய மனுஷாளா இருக்கிறதிலே உள்ள ஆபத்தே அதுதான். சாதாரண மனுஷா பார்வையிலேருந்து நீங்கள்ளாம் தப்பிச்சுட முடியாது.
Jayakanthan (Sila Nerangalil Sila Manithargal (Tamil Edition))
தெரிஞ்சுண்டு 'கேர்' பண்ணாமல் இருந்தால் சரி. தெரியாமலே இருந்தால் எப்படி...
Jayakanthan (Sila Nerangalil Sila Manithargal (Tamil Edition))
There are no exclusive standards for a wife. It depends on the husband.
D. Jayakanthan (Once an Actress)
இதயத்தைக் கொன்றுவிட்டு எங்கேயும் எவருடனும் வாழ்வது சாத்தியமில்லை அல்லவா? 11
Jayakanthan (Parisukkup Po! (Tamil))
நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.
Jayakanthan (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam])