“
கோடை மழையின்போது இலை, தழை, புல், பூ, மரித்துப்போன புழு, பூச்சிகள், மிருகங்கள் ஆகியவற்றின் ‘சத்து’ நீரில் அடித்துச் செய்யப்படுகிறது. இதைத் தடுக்க அரசு வேலையிலுள்ள சிப்பாய்களையும், போலிஸ்காரர்களையும், சிறிய அணைக்கட்டுக்களையும் குட்டைகளையும் கட்டுவதற்கு உபயோகிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் நிலம் வளம்பெறும். மழைநீர் நிலத்துக்குள்ளேயே உறிஞ்சப்படும். மிச்சமுள்ள நீர் நதிகளில் சென்று கலக்கும். மேலும், திறந்தவெளியில் வேலை செய்ததன் விளைவாக நமது சிப்பாய்களின் ஆரோக்கியமும் மேம்படும். நமது அரசின்கீழ் இரண்டு லட்சம் ராணுவ சிப்பாய்களும் போலீஸ்காரர்களும் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு நாளும் இவர்கள் செய்யும் வேலையும் மதிப்பு ஒரு நாளைக்கு ஒரு அணா என்று கணக்கிட்டாலும் அரசின் வருமானம் இருபத்தைந்து லட்சம் ரூபாயாக உயரும்.
”
”