“
வெற்றி பெற்றவனை விட தோற்றவனிடம் தான் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் போல் இருக்கிறது .. காரணம் - வெற்றி விளையாட்டை பெருமை கொள்ள செய்கிறது, தோல்வி விளையாட்டை புரிந்துகொள்ள செய்கிறது.. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒரு முறையாவது தோற்றவர்கள்தானே ..
”
”
S. Ramakrishnan
“
സൌന്ദര്യമൊ കരുത്തൊ കാരണം ഇഷ്ടപെട്ടുപോയ ഇണയെ എന്നെന്നേക്കും സ്വന്തമായി നിറുത്താന് പ്രയോഗിക്കുന്ന തന്ത്രമാണ് പ്രണയം
”
”
T.D. Ramakrishnan (ഫ്രാൻസിസ് ഇട്ടിക്കോര | Francis Itty Cora)
“
உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள் ” - (ஜன்னல் வழியான உலகு)
”
”
S. Ramakrishnan
“
സ്വാര്ത്ഥതയുടെ പേരില് ഇണയെ ചങ്ങലയില്ലാതെ കെട്ടിയിടാനുള്ള തന്ത്രമാണ് കുടുംബം
”
”
T.D. Ramakrishnan (ഫ്രാൻസിസ് ഇട്ടിക്കോര | Francis Itty Cora)
“
നന്നായി അഭിനയിക്കാന് കഴിയുന്നവനേ നല്ല കച്ചവടക്കാരനാകാന് പറ്റു. സ്നേഹവും അടുപ്പവുമെല്ലാം ഭംഗിയായി അഭിനയിക്കണം .കഴുത്തറക്കുമ്പോഴും പുഞ്ചിരിക്കണം .ചതിക്കുമ്പോഴും സഹായിക്കുകയാണെന്നു തോന്നണം .നുണപറയുമ്പോഴും സത്യ പ്രഭാഷണംനടത്തുന്ന വിശുദ്ധന്റെ മുഖഭാവമായിരിക്കണം .ഒരിക്കിലും മുഖത്ത് ദേഷ്യം വരാന് പാടില്ല .
”
”
T.D. Ramakrishnan (ഫ്രാൻസിസ് ഇട്ടിക്കോര | Francis Itty Cora)
“
When we have a clear goal in mind, we think we are struggling to reach a summit. But there is no summit. When we get there, we realize we have just climbed a foothill, and there is an endless series of mountains ahead still to be climbed.
”
”
Venki Ramakrishnan (Gene Machine: The Race to Decipher the Secrets of the Ribosome)
“
இது நாள் வரை நகரையும் பாண்டவர்களையும் பற்றிப் பீடித்திருந்த ஆசைதான் நாய் உருவம் கொண்டு அவர்கள் மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான். சதா விழிப்புற்றபடி அலைந்து கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக் கண்டபடியிருந்த அவனும் பிறகு தன் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.
”
”
S. Ramakrishnan (உப பாண்டவம் [Uba pandavam])
“
உலகம் எண்ணிக்கையற்ற கதவுகள் கொண்டது.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
யானையைப் பார்த்து வியப்படைவர்களில் ஒருவர் கூட எறும்பைப் பார்த்து வியப்படைவது கிடையாது. ஆனால் யானை எந்த அளவு வியப்பானதோ அதே அளவு எறும்பும் வியப்பானதே!
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
ருசி நாக்கில் படிந்தவுடன் அது நினைவாகிவிடுகிறது. நல்ல நினைவுகள் ஒரு நாளும் அழிவதேயில்லை. எத்தனை வயதானாலும் நல்ல சாப்பாட்டிற்கு ஏங்குவது அந்த நினைவால் தான்.
பசியைக் கடந்து செல்பவர்களின் கைகளுக்குத் தான் ருசி சாத்தியப்படும் போலும்.
”
”
S. Ramakrishnan (கர்னலின் நாற்காலி)
“
நான் திகைப்புற்று கண் திறந்தபோது படகு நதியில் போய்க் கொண்டிருந்தது. அஸ்தினாபுரத்திற்கு என்னை கூட்டிச்செல்ல ஏற்றி கொண்ட மனிதன் துடுப்பிட்டவாறே இருந்தான். அவன் இப்பொழுது வாலிபனை போல தோற்றம் கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.
"நீ கிருஷ்ண துவைபான வியாஸனா?"
ஆம் என்று தலையசைத்தான். அப்பொழுது தான் கவனித்தேன். படகை நதி கரைக்கு செலுத்தாமல் நதியின் திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள் நதிவழியில் வெகு தூரம் வந்துவிட்டோம். எதுவும் திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவனிடம் நான் கேட்டேன்,
"நாம் எங்கே செல்கிறோம்?"
"துவக்கத்திற்கு".
இதன் துவக்கத்திற்கு என்றோ, அது எங்கிருக்கிறது என்றோ, அவன் சொல்லவோ நான் கேட்கவோ இல்லை. நதி செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தது.
”
”
S. Ramakrishnan (உப பாண்டவம் [Uba pandavam])
“
கிருஷ்ணை யாருமற்ற தன் அறையில் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு தன் புத்திரர்களை விடவும், கணவர்களை விடவும், பிரியத்திற்கு உரியவனாக கிருஷ்ணன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. திரௌபதி உறவின் வரம்புகளுக்குள் கிருஷ்ணனை வைத்துக்கொள்ளவில்லை. அவன் கிருஷ்ணன். அதுவே போதுமானதாய் இருந்தது.
”
”
S. Ramakrishnan (உப பாண்டவம் [Uba pandavam])
“
நம் காலத்தில் அழகு என்பது விற்பனை தந்திரம் மட்டுமே. நிரந்தர அழகு என்ற ஒன்றை இன்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அழகு அகத்துடன் தொடர்பு கொண்டதாக இதுவரை கருதி வந்த எண்ணம் இன்று நுகர்வு பண்பாட்டால் மாற்றப்பட்டிருக்கிறது. அழகும் உன்னதமும் பிரிக்க பட்டுவிட்டன. அழகு என்பதைக் கவர்ச்சி என்ற பொருளிலே இன்று பயன்படுத்துகிறார்கள்.
”
”
S. Ramakrishnan
“
பங்காளதேஷ் உருவாவதற்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் விஷயத்தில் மட்டும் கைகட்டி மௌனம் சாதிப்பதுதான் கவலைக்குரியது.
”
”
S. Ramakrishnan (Maraikkappatta India (Tamil))
“
A Culture based on superstitions will do worse than one based on scientific knowledge and rational thoughts
”
”
Venkatraman Ramakrishnan
“
காட்டு நெருப்பைப் போலிருந்தாள் மாதிரி. அவள் மத்ர நாட்டுப் பெண்களைப் போலவே தன் பூப்பின் காலத்தில் அடி எடுத்து வைத்தே இச்சைகளின் அரும்புகள் உடலில் மொக்கு விடுவதை அறிந்திருந்தாள்.
”
”
S. Ramakrishnan (உப பாண்டவம் [Uba pandavam])
“
உலகில் மாறாத இயக்கங்களில் ஒன்று எறும்பின் அலைச்சல்.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
விதையைத் துப்பி எறிவது மிகச் சுலபம். ஆனால் விதையிலிருந்து ஒரு விருட்சத்தை உண்டாக்கிக் காட்டுவது மிகப்பெரிய செயல் என்று சொல்வான்.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
எல்லா வெற்றிகளும் சந்தோஷங்களும் துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை ?
”
”
S. Ramakrishnan (இடக்கை [Idakkkai ])
“
மண்புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடம் ஊர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்கிறார்கள்.
”
”
S. Ramakrishnan (Maraikkappatta India (Tamil))
“
இப்படி ஒவ்வொரு நாளும் நம் வாழ்வோடு நூற்றுக் கணக்கானவர்களின் வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது.அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு மனிதருக்குக் கூட நன்றி சொல்வதில்லை.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
பழந்தமிழ் ஆய்வாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘‘இன்றைய ஜெராக்ஸ் எனும் நகலெடுப்பு போல, இருநூறு வருடங்களுக்கு முன்பாக, ஒரு ஏட்டிலிருந்து நகல் எடுத்து இன்னொரு ஏட்டில் எழுதித் தருவதற்கென்று ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் வசித்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயர். அப்படி நகல் எடுத்து எழுதுபவர், தான் பிரதி எடுத்த ஏட்டின் கடைசிப் பாடலுக்குக் கீழே தனது முத்திரையாக, தனது பணியானது தமிழுக்குத் தொண்டு செய்யும் அடியார்க்கு செய்யும் சிறு ஊழியம் என்று ஒப்பமிட்டு, அதன் கீழே தனது பெயரையும், ஊரையும் தெரிவிக்கும் முறை இருந்தது’’ என்றார்.
”
”
S. Ramakrishnan (தேசாந்திரி [Desandri])
“
ஆகஸ்ட் 15-ம் தேதி அஷ்டமி என்பதால் அன்று சுதந்திரம் பெறக்கூடாது. ஆகஸ்ட் 17-ம் தேதி சுதந்திரம் பெற வேண்டும் என்று ஜோதிடர்கள், நேருவைச் சந்தித்து வலியுறுத்தினர். தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று நேரு மறுத்துவிட்டார். ஆனாலும், கடைசி வரை அஷ்டமி அன்று சுதந்திரம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து இருக்கின்றன.
”
”
S. Ramakrishnan (Maraikkappatta India (Tamil))
“
வேம்பின் காற்று எங்கிருந்தோ மழையைக் கொண்டுவந்தது. வேம்புதான் அவர்களைக் காப்பாற்றியது.
வேப்பங்காற்றின் சிலுசிலுப்பால் மழை கரிசல் பூமியில் இறங்கியது. அந்த நன்றியை மறக்காமல் தானோ என்னவோ வேம்பில்லாத கரிசல் கிராமங்களேயில்லை. ஊருக்கு நூறு மரங்களுக்கும் மேலிருந்தன.
வேம்புதான் கரிசலின் அடையாளம். வேம்பில்லாத ஊர்களே இல்லை. வெக்கையில் அம்மை உடல் கொப்பளிக்கும் போது வேம்புதான் மருந்தாகிறது. வேம்பைத் தாய் என்று கருதினார்கள். வேம்பின் கொழுந்தைப் பிடுங்கி வாயிலிட்டு அதன் கசப்பை ருசித்து வளர்ந்தவர்கள் என்பதாலே வாழ்வின் கஷ்டங்களை, கசப்பான அனுபவங்களை அவர்கள் இயல்பாகவே ஏற்றுக் கொண்டார்கள்.
”
”
S. Ramakrishnan (சஞ்சாரம் [Sancharam])
“
தனித்துவமான குறுங்தைகள் மற்றும் சிறுகதைகளை அகஸ்டோ மான்டெரோசோ எழுதியிருக்கிறார். இவரது இன்னொரு கதையில் தவளை ஒன்று தான் தவளை தானா எனச் சந்தேகம் கொள்கிறது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. இதற்கு மற்றவர்களின் ஒப்புதல் தேவை என்பதை உணருகிறது. அவர்களைக் கவர கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்கிறது. தான் தவளை என்பதை எப்படி உணர வைப்பது என அதற்குத் தெரியவில்லை. முடிவில் தன்னையே உண்ணத் தருகிறது. அப்போது தவளைக்கால் போலவே இல்லை. மிகவும் சுவையாக இருக்கிறது என அவர்கள் புகழுகிறார்கள். தவளை தனது அங்கீகாரத்தைப் பெறுகிறது.
ஒரு தவளை ஏன் பிறரது அங்கீகாரத்திற்காக ஏங்குகிறது. அது தவளை தான் என்ற நம்பிக்கையை ஏன் இழந்து போனது. இந்தக் கேள்விகள் எழுந்தவுடன் இது தவளையைப் பற்றிய கதையில்லை என்பது புரிந்து விடுகிறது.
மனிதர்களின் பிரச்சனையைத் தவளைகளின் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார். அங்கீகாரத்திற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள், அபத்தமான செயல்பாடுகளைக் கேலி செய்கிறார்.
”
”
S. Ramakrishnan
“
சிலசமயம் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு ஈரவேஷ்டி காற்றில் உலர்வதுபோல மனது மெல்ல எடையற்றுப்போவதை உணர்ந்திருக்கிறான். சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று தரைமண் எடுப்பதுபோல மூச்சுத் திணறச்செய்வதாக இருக்கும். சில நேரம் உடல் எங்கும் கண்கள் முளைத்துவிட்டது போலவும் தோன்றும்.
வாசிப்பில் ஆழ்ந்துவிட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை பக்கிரி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. தன்னிடம் இருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை, அது ஒரு மணம், பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது, அதை மலரச் செய்வது, வாசனையைக் கமழவிடுவதுதான் இசையா?
ஒரு நாள் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென மனதில் இறந்துபோன அம்மாவின் முகம் தோன்றி மறைவதை உணர்ந்தான். இவ்வளவு சந்தோசமான ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் மனம் ஏன் என்றோ இறந்துபோய்விட்ட அம்மாவின் மீதான துயரத்தைப் பீறிடச் செய்கிறது. மனம் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்குத் துயரம் தேவையானது தானா. அவனுக்குப் புரியவில்லை. ஆனால் துக்கம் பாரம் ஏறுவதாகயிருந்தது.
அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மோகனத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தான். தனது துக்கம் இசையின் வழியே கரைந்து கேட்பவர்களின் மனதை ஈரமாக்கியதை உணரந்தபடியே அவன் மோகனம் வாசித்து முடித்தான்.
”
”
S. Ramakrishnan (சஞ்சாரம் [Sancharam])
“
பிரச்னைகளுக்காக ஒருபோதும்
”
”
S. Ramakrishnan (சிறிது வெளிச்சம்! [Siruthu Velitcham])
“
But as Ramakrishnan admits, Facebook probably is not where the next major national security threat is going to pop up.
”
”
Patrick Tucker (The Naked Future: What Happens in a World That Anticipates Your Every Move?)
“
1934-ல் பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தைப் பற்றி குறிப்பிட்ட காந்தி, “அது, மக்களின் பாவத்துக்கு கடவுள் அளித்த தண்டனை” என்று கூறியதைப் பகிரங்கமாகக் கண்டித்த தாகூர், மகாத்மா பட்டத்துக்கு காந்தி தகுதியானவர் அல்ல, அதைத் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.
”
”
S. Ramakrishnan (Maraikkappatta India (Tamil))
“
பெரும்பாலோரின் பக்தி என்பது சுயநலம்தான் என்று தோன்றுகிறது. ஈகையும் கருணையும் இல்லாத மனதில் எப்படி சாந்தமும் அன்பும் தோன்றும்? மனிதன் முதலில் அரித்துக்கொள்ளவேண்டியது கடவுளை அல்ல ; தன்னை சுற்றிய மனிதர்களைத்தான்.
”
”
S. Ramakrishnan (தேசாந்திரி [Desandri])
“
உலகம் ஒரு மனிதனைக் கைவிடும் போது புத்தகங்கள் அவனை அரவணைத்துக் கொள்கின்றன. ரகசியமாக அவனுடன் பேசி உற்சாகத்தை, நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. புத்தகங்களில் நாம் வாசிக்கும் சொற்கள் அன்றாட வாழ்வில் தராத புதிய அர்த்தத்தைத் தருகின்றன. வாசித்தல் என்பதை எளிமையான விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது ஒரு விந்தை. வாசிப்பின் வழியே மனதில், நினைவில் உருவாகும் மாற்றங்களை எளிதாகச் சொல்லிவிட முடியாது.
”
”
S. Ramakrishnan
“
காடு அழியும்போது கொள்ளும் ரௌத்திரம் மிகவும் வலிமையானது.
”
”
S. Ramakrishnan (யாமம் [Yamam])
“
மனதின் நுணுக்கங்களை முழுமையாக வார்த்தையில் வெளிப்படுத்திவிட முடியாது. ஆனால் வார்த்தைகளின் வழியே அடையாளம் காட்ட முடியும் என்கிறார் துறவி ஜுயிபேன். பௌத்த துறவிகள் கவிதை எழுதுவதன் நோக்கம் இதுவே.
”
”
S. Ramakrishnan
“
ஆகாசமும் தண்ணீரும் கதவுகள் அற்றது. அதை யாரும் பூட்டுவதுமில்லை. திறப்பதுமில்லை என்கிறது ஜென்.
”
”
S. Ramakrishnan
“
திகாத்தின் சிறுகதையில் வானுலகின் தூதுவர் ஒரு நாள் தஸ்தாயெவ்ஸ்கி விட்டிற்கு வந்து கடவுள் அவரைச் சந்திக்க விரும்புவதாக அழைத்துப் போகிறார்.
வானில் தஸ்தாயெவ்ஸ்கி கடவுளைச் சந்திக்கிறார். உரையாடுகிறார்.
அப்போது கடவுள் தஸ்தாயெவ்ஸ்கியை புகழ்ந்து பேசிவிட்டு நீங்கள் இருண்ட விஷயங்களை மட்டுமே எழுதுகிறீர்களே. நன்மை உங்கள் கண்ணில் படவில்லையா, இந்த உலகை வெறும் ஆறே நாட்களில் சிருஷ்டித்தேன் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்… கவனக் குறைவால் ஒருவேளை பிசகுகள் நேர்ந்திருக்கலாம் என்று சொல்கிறார்.
வீடு திரும்பிய தஸ்தாயெவ்ஸ்கி இதன் காரணமாகவே கரமசோவ் சகோதரர்கள் நாவலை எழுத துவங்கினார் எனக் கதை முடிகிறது.
தஸ்தாயெவ்ஸ்கியை தீவிரமாக நேசிப்பவரால் மட்டுமே இப்படி ஒரு குறுங்கதையை எழுத முடியும். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தால் பாதிக்கப்பட்டவர் திகாத். அவரது கதைகளும் தஸ்தாயெவ்ஸ்கியின் பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன
திகாத் சொல்வது போல நன்மைக்கும் தீமைக்குமான இடத்தை, காரணத்தை, அதன் பின்னுள்ள மனித மனதின் செயல்பாடுகளை தஸ்தாயெவ்ஸ்கி கரமசோவில் விசாரணை செய்கிறார். ஆனால் அவர் கடவுளின் பக்கம் நிற்கவில்லை. மாறாக மனிதனின் தடுமாற்றங்கள் மற்றும் குற்றத்தின் பின்னுள்ள காரணிகளை கண்டறிகிறார். இன்பங்களை அனுபவிப்பது தான் வாழ்வின் பிரதான நோக்கமா. அதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டானா என கேள்வி எழுப்புகிறார். பாதர் ஜோசிமா புனிதரைப் போல சித்தரிக்கபடுகிறார். ஆனால் இறந்த பிறகு அவரது உடலில் இருந்தும் துர்நாற்றமே அடிக்கிறது. அலியோஷாவால் அதை ஏற்க முடியவில்லை.
திகாத் கரமசோவை எவ்வளவு முறை படித்திருப்பார். எதில் வியந்து போனார் என தெரியவில்லை. ஆனால் அவர் அந்த நாவலுக்கு பின்னே அதிசயம் ஒளிந்திருப்பதாக நினைக்கிறார். அதை தான் அவரது கதையும் விவரிக்கிறது.
இக்கதையில் கடவுளும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகராக இருப்பது பிடித்திருக்கிறது. அது போலவே வானுலகின் அழைப்பை தஸ்தாயெவ்ஸ்கி எளிதாக எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். திரும்பி வந்துவிடுவோம் என்று உறுதியாக நம்புகிறார். தஸ்தாயெவ்ஸ்கியிடம் கடவுள் பேசும் இடமும் சொல்லாமல் விட்ட விஷயங்களும் தான் கதையை சிறப்பாக்குகின்றன.
தி பிரதர்ஸ் கரமசோவ் நாவல் ஜனவரி 1879 முதல் நவம்பர் 1880 வரை தி ரஷியன் மெசஞ்சரில் ஒரு தொடராக வெளியிடப்பட்டது. அது வெளியான நான்கு மாதங்களுக்குள் தஸ்தாயெவ்ஸ்கி இறந்தார்.
1878 ஆம் ஆண்டு ஏப்ரலில் தி பிரதர்ஸ் கரமசோவிற்கான தனது முதல் குறிப்புகளைத் தொடங்கினார் என்கிறார்கள்
அக்டோபர் 1877 ல் தஸ்தாயெவ்ஸ்கி தனது நாட்குறிப்பில் இந்த நாவல் எழுதும் ஆசையைப் பதிவு செய்திருக்கிறார்
மே 1878 இல், தஸ்தாயெவ்ஸ்கியின் 3 வயது மகன் அலியோஷா இறந்து போனான். அந்தத் துயரம் இந்த நாவலில் மறைமுகமாக வெளிப்படுகிறது..
”
”
S. Ramakrishnan
“
All the words that were ever written in this world, were written by You. All the words that were ever spoken in this world, were spoken by You. All the actions that were ever performed in this world, were performed by You.
”
”
Arvind Ramakrishnan (The Meaning of Life. The Answer to "Who Am I?")
“
Popular textbooks on database systems include Database Systems: The Complete Book by Garcia-Molina, Ullman, and Widom [GMUW08]; Database Management Systems by Ramakrishnan and Gehrke [RG03]; Database System Concepts by Silberschatz, Korth, and Sudarshan [SKS10]; and Fundamentals of Database Systems by Elmasri and Navathe [EN10]. For an edited collection of seminal articles on database systems, see Readings in Database Systems by Hellerstein and Stonebraker [HS05].
There are also many books on data warehouse
”
”
Vipin Kumar (Introduction to Data Mining)
“
முதுமை சதா விழித்துக் கொண்டே தானிருக்கிறது. உதிராமல் மிஞ்சியிருக்கும் இலைகளைப் போல இன்னமும் சில ஆசைகள் மனதில் அசைந்து சப்தமிட்டபடியே இருக்கின்றன. விழித்திருப்பவர்களுக்கு இரவு நீண்டது.
”
”
S. Ramakrishnan (உப பாண்டவம் [Uba pandavam])
“
நான் நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். இதனுள் பெரிய சைன்யமே புதைவு கொண்டுள்ளது என்பதை காணவேண்டி காத்திருந்தேன்.
”
”
S. Ramakrishnan (உப பாண்டவம் [Uba pandavam])
“
செல்ல முடிந்ததைப் போல பல மடங்கு எடையைத்தான் எப்போதும் இழுத்துக் கொண்டு போகின்றன. அது பேராசையல்ல. மாறாக உழைப்பின் மீதான பெரிய நம்பிக்கை. தன்னால் செய்ய இயலும் என்ற உத்வேகம்.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
ஒரு விதையைக் காணும்போது அதனுள் ஒடுங்கியுள்ள விருட்சம் நம் கண்ணில் தெரிவதில்லை.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
மனிதர்கள் இயற்கையைப் புரிந்துகொள்ள தவறியதோடு இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தவறியிருக்கிறார்கள்.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
படகில் பயணம் செய்கின்றவர்களில் ஒருவர்கூட அதைச் செய்த மரத் தச்சனை நினைப்பதில்லை. இது, நாம் மேற்கொள்ள வேண்டிய கவனம்.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
நம்மை இந்தப் பிரபஞ்சத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஏதோ ஒரு மருத்துவச்சியோ அல்லது பெண் மருத்துவரோதான். நம் உடலில் அவரது விரல்களின் ஸ்பரிசம் கண்ணுக்குத் தெரியாமல் படிந்திருக்கிறது.
”
”
S. Ramakrishnan (ஆதலினால் [Aadhalinaal])
“
நம் தேசம் ஏன் இப்படியானது. எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துவிட்ட பிறகு எப்படி வாழுவது. இதற்கு மாற்றமே கிடையாதா. அல்லது நாம் தான் மாற்றத்தைத் துவங்க வேண்டுமா என ஒரு காட்சியில் அன்டோனிஸ் கோபத்தில் கேட்கிறார். எளிய மனிதனின் இக்கோபம் கிரேக்கத்திற்கு மட்டும் உரியதில்லை.
”
”
S. Ramakrishnan
“
Philosopher Stephen Cave argues that the quest for immortality has driven human civilization for centuries. He classifies our coping strategies into four plans. The first, or Plan A, is simply to try to live forever or as long as possible. If that fails, then Plan B is to be reborn physically after you die. In Plan C, even if our body decays and cannot be resurrected, our essence continues as an immortal soul. And finally, Plan D means living on through our legacy, whether that consists of works and monuments or biological offspring.
”
”
Venki Ramakrishnan (Why We Die: The New Science of Ageing and Longevity)
“
our brains appear to have evolved a protection mechanism by thinking of death as something that happens to other people, not ourselves.
”
”
Venki Ramakrishnan (Why We Die: The New Science of Ageing and Longevity)
“
the disposable soma hypothesis posits that an organism with limited resources must apportion them between investing in early growth and reproduction and prolonging life by continuously repairing wear and tear in the cell.
”
”
Venki Ramakrishnan (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality)
“
What causes Alzheimer’s disease is a burning question because that holds the key to preventing it. The answer depends on how you define cause. The immediate cause may well be the formation of tau or amyloid-beta filaments in the brain. However, an earlier and root cause is the cell’s inability to manage the excess of unfolded proteins that aggregate to form these filaments
”
”
Venki Ramakrishnan (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality)
“
This in turn is caused by damage to our control systems: the quality control and recycling machinery of the cell that we discussed earlier in the chapter. And that damage to our control systems is a result of aging.
”
”
Venki Ramakrishnan (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality)
“
At age 25, our probability of dying in the next year is only about 0.1 percent. This rises to 1 percent at age 60, 6 percent at age eighty, and 16 percent at age 100. By the time a person reaches 108 years old, there is only about a 50 percent chance of making it another year.
”
”
Venki Ramakrishnan (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality)
“
போலந்து இலக்கியத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் தாக்கம் பற்றிய ஆய்வு நூல் ஒன்றில் நவீன போலந்து இலக்கியத்தின் திசைமாற்றத்திற்குத் தஸ்தாயெவ்ஸ்கி முக்கியக் காரணியாக இருந்திருக்கிறார் என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.
”
”
S. Ramakrishnan
“
ஒரு கேள்வி எப்போதும் இன்னொரு கேள்வியைத்தான் பதிலாகத் தருகிறது. கேள்வியின் அடியில் உள்ள மன வேதனையோ ஏதாவது ஒரு பதிலால் தான் கரைந்து போய்விட மாட்டோமா என்று காத்திருக்கிறது.
எனக்கு அந்தப் பதில் தெரியவில்லை!
”
”
S. Ramakrishnan (கேள்விக்குறி [Kelvikuri])
“
ஒருவகையில், புத்தகங்களை வைக்க இடமில்லாத நெருக்கடிதான் புத்தகம் படிப்பதைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பேன். வீட்டில் மிகப் பெரிய நாலகங்களை அமைத்தவர்கள் அதன்பிறகு படிப்பதையே விட்ட கதையை நான் அறிவேன். நெருக்கடியான இடத்திற்குள் மறைத்தும் ஒளித்தும் சண்டையிட்டும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களே நம்மை மறுபடி வாசிக்கத் தூண்டுகின்றன.
”
”
S. Ramakrishnan (இன்றில்லை எனினும் [Indrillai Eninum])
“
We are taught from the time we are born about how to behave, how to look and how to act. Comply and do not question! The path is already set for you, as long as you stay on it you will make it.
”
”
Vijay Ramakrishnan (Between the Mountains and the Sea)
“
நண்பர் கேட்டார்,
“அமெரிக்காவிலிருந்து அங்குப் போய்ச்சேர எவ்வளவு நாட்களானது”
ஜோன்ஸ் சொன்னார்,
“இங்கிருந்து சான்டரெம் வரை ஒன்பது மணி நேர விமான பயணம். பின்பு அங்கேயிருந்து படகில் ஆறு மணி நேரப்பயணம். ஒரு படித்துறையில் இறங்கி அங்கே ஜீப்பினை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தேவையான பொருட்களுடன் இன்னொரு ஐந்து மணி நேர பயணம். ஜகீராசிங்கா என்ற இடத்தில் பழங்குடிகள் வசிக்கிறார்கள். அங்கே போவதற்குப் பழங்குடி மக்களில் எவரேனும் நம்மைக் காட்டினுள் அழைத்துப் போக வேண்டும். அது வரை ஒரு பாலத்தில் காத்திருக்க வேண்டும்”
“எவ்வளவு நேரம்” எனக்கேட்டார் நண்பர்
“சில நாட்கள் அல்லது சில வருஷங்கள்” என்று அமைதியாகச் சொன்னார் ஜோன்ஸ்.
“பழங்குடி மக்கள் அழைத்துப் போக ஒத்துக் கொண்டுவிட்டால் எவ்வளவு நேரம் காட்டினுள் பயணிக்க வேண்டும்” எனக்கேட்டார் அந்த நண்பர்.
“அது மழையின் கையில் இருக்கிறது. மழை நம்மை அனுமதித்தால் இரண்டு நாட்களில் காட்டினுள் போய்விடலாம். அனுமதிக்காவிட்டால் வழியிலே சாக வேண்டியது தான்.”
“அவ்வளவு சிரமமா” என வருத்தப்பட்டபடியே நண்பர் கேட்டார்.
“ஜகீராசிங்காவில் எவ்வளவு காலம் ஆய்வு செய்தீர்கள்”
“பழங்குடியின் மொழியை அறிந்து கொள்ள மூன்று ஆண்டுகள். அவர்கள் மௌனத்தை அறிந்து கொள்ள முப்பது ஆண்டுகள் போதவில்லை”.
“ஏன் அவர்கள் மொழியில் காலத்தைக் குறிக்கும் சொற்கள் இல்லை”
“காலமும் எண்ணிக்கையும் அதிகாரத்தின் அடையாளம். எல்லையில்லாத ஒரே காட்டில் வேறு வேறு இடங்களில் வசிப்பது போலவே முடிவற்ற ஒரே காலம் இருப்பதாகக் கருதுகிறார்கள். காலத்தைப் பிரிக்காவிட்டால் நம் இருப்பு தண்ணீரைப் போலாகிவிடும். தண்ணீருக்குக் கடந்தகாலமில்லை. எதிர்காலமில்லை
”
”
S. Ramakrishnan (கர்னலின் நாற்காலி)
“
நம் எல்லோரின் மனதிலும் பால்ய வயதின் ஏதோவொரு புகைப்படம் அழிவற்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்துடன் ரகசியமாக உரையாடுகிறோம். எதிர்காலக் கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். சோர்வடையும் போது உத்வேகம் கொள்கிறோம்.
சிரிப்பை மறந்த சிறார்களின் புகைப்படங்கள் இந்த உலகிற்கு எதையோ சொல்கின்றன. புகைப்படத்தின் எடை என்பது அதிலிருக்கும் சந்தோஷத்தின் பொருட்டே அமைகிறது என்கிறார்கள்.
புகைப்படம் நம்மோடு பேசும் மொழி நாம் மட்டுமே அறிந்தது. ரகசியமானது. ஆறுதல் தரக்கூடியது.
உலகம் அதைப் பொருட்படுத்துவதேயில்லை.
”
”
S. Ramakrishnan (கர்னலின் நாற்காலி)
“
மனிதர்கள் தராத ஏதோவொரு அன்பை, நெருக்கத்தைப் பொம்மைகள் தருகின்றன. மனக்குழப்பம் கொண்டவர்களால் பொம்மைகளைத் தேர்வு செய்ய இயலாது. பொம்மைகள் களங்கமின்மையின் அடையாளம். மௌனத்துணை.
பொம்மைகள் வழியாகவே சிறுவர்கள் தங்களைப் பெரியவர்களாக உணருகிறார்கள். அதனால் தான் பொம்மைக்கு ஒரு சிறுமி சோறு ஊட்டுகிறாள். தூங்க வைக்கிறாள். அன்னாகரீனினா பொம்மை கடையிலிருந்த விதவிதமான பொம்மைகளைப் பார்த்தபடியே இருந்தாள். பொம்மைகளின் கண்கள் உயிர்ப்பற்றவை. பொய்யான சிரிப்புக் கொண்ட பொம்மைகளின் முகம் செயற்கையானது. .. அடியும் வலியும் பொம்மைகளை ஒன்று செய்யாது. பெரியவர்களுக்குப் பொம்மை என்பது விலைக்கு வாங்கப்படும் பொருள். சிறார்களுக்கோ பொம்மைகள் கோபத்திற்கும் ஆசைக்குமான வடிகால்.
காலம் சிலரைப் பொம்மையாக்கித் தானே உருட்டி விளையாடுகிறது உண்மையில் அன்னா தன்னையே ஒரு பொம்மையாக்கி மகனிடம் தரவே விரும்பினாள். எந்தப் பொம்மையும் அன்னையாக முடியாது தானே.
”
”
S. Ramakrishnan (கர்னலின் நாற்காலி)
“
தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும்.
”
”
S. Ramakrishnan
“
தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்விகள் எளிமையானவை. குடும்பம் எதன் அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. பெண்கள் ஏன் ஆண்களை நம்புகிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதன் உண்மையான காரணத்தை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா? அடுத்த மனிதன் ஏன் எப்போதுமே நம்மை புரிந்து கொள்ள மறுக்கிறான்?. காரணமில்லாமல் ஒரு மனிதன் மற்றவனை ஏன் காயப்படுத்துகிறான்.? காதல் என்பதை எப்படி புரிந்து கொள்வது ? அவமானப்படுத்துவதில் மனிதர்கள் ஏன் சந்தோஷம் கொள்கிறார்கள். வறுமையும் நெருக்கடியும் மனிதனின் சுபாவத்தை மாற்றிவிடுமா? குற்றமும் தண்டனையும் மனித உடலின் மீதே ஏன் தன் கவனத்தை செலுத்துகிறது என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்விகள் வாழ்விலிருந்து உருவானவை.
அந்த கேள்விக்கான விடைகளின் வழியே அவர் வாழ்வுகுறித்த சில அடிப்படை பார்வைகளை முன்வைக்கிறார். அது மதமோ, இறையியலோ, விஞ்ஞானமோ தரும் நம்பிக்கைகளை விடவும் ஆழமாக மனிதர்களுக்கு வாழ்வை புரிந்து கொள்ளவும் முன்செல்லவும் வழிகாட்டுகிறது .
”
”
S. Ramakrishnan
“
கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல்படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.
”
”
S. Ramakrishnan
“
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது.
”
”
S. Ramakrishnan
“
உலகை முழுமையாக நேசிப்பவன் அசடனாகவே கருதப்படுவான் என்று சொல்லும் தஸ்தாயெவ்ஸ்கி, தன்னை அறிந்தவன் மற்றவர்களின் பரிகாசத்தை ஒரு போதும் கண்டுகொள்வதில்லை என்றும் விளக்கிகாட்டுகிறார்.
”
”
S. Ramakrishnan
“
உலகெங்கும் யாரோ, ஏதோ ஒரு இடத்தில், ரகசியமாக, சந்தோஷமாக, வடிகாலாக, அன்பின் பரிசாக, காதலின் நினைவாக, போராட்டத்தின் துணையாக, தனிமையின் நண்பனாக, ஞானத்தின் திறவுகோலாக, அறிவின் உச்சமாக, ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துப் புரட்டுகிறார்கள். உலகின் மீது வெளிச்சம் பரவுவது போன்ற மாயமது. புத்தகத்தைத் திறக்கும் போது இருந்த மனிதன் அதை முடிக்கும் போது மாறிவிடுகிறான். என்னவாக மாறினான், என்ன கிடைத்தது என்று அவனால் துல்லியமாகச் சொல்லமுடியாது. ஆனால் அந்த மாற்றம் புதுவகை ஆனந்தம். புது வகை நம்பிக்கை, புதிய திறப்பு என்றே சொல்வேன்.
”
”
S. Ramakrishnan
“
வாசித்தல் என்பது பறத்தலா, வாசித்தல் என்பது நீந்துவதா, வாசித்தல் என்பது கூடு விட்டுக் கூடு பாய்வதா, வாசித்தல் என்பது தண்ணீரின் மீது நடப்பதா, வாசித்தல் என்பது கரைந்து போவதா, வாசிப்பு என்பது சொல்லை ஆயுதமாக ஏந்துவதா, வாசித்தல் என்பது காலத்தின் பின்னோக்கி பயணம் செய்வதா, வாசித்தல் என்பது தியானமா, வாசித்தல் என்பது சொற்களைக் காதலிப்பதா, அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்வதா, வாழ்வின் புதிர்களை அவிழ்க்கும் செயல்பாடா, வாசிப்பு என்பது ரகசியமான நடனமா, எல்லாமும் தான். வாசிப்பின் வழியே நாம் மாறத்துவங்குகிறோம். நம்மோடு உலகமும் மாறத்துவங்குகிறது.
”
”
S. Ramakrishnan
“
No self-help book would help unless the help comes from within.
”
”
Sriram Ramakrishnan
“
goeth into the mouth defileth a man; but that which cometh out of the mouth, this defileth a man. Matthew 15:11
”
”
Ramakrishnan B (The story of India through food: OPOS Cookbook)
“
யாருமில்லை என்ற வெற்று வெளியில் தனித்த பீஷ்மரின் முன்பாக காற்று சுற்றி அலைந்தபடி அவர் உடலின் மீதேறிச் சிகையைக் கலைத்தது. அவர் காற்றின் மிருதுவை அறிந்தவராக அதன் நெருக்கத்தோடு எதையோ பேச முற்பட்டவரைப் போல கேட்டார்.
‘நீ எதைக் கேட்க விரும்புகிறாய் காற்றே?’
காற்று அந்த மனிதனை வலம் சுற்றியபடியே கேட்டது.
‘இத்தனை அலைக்கழிப்பும் வேகமும் கொண்ட என் இயல்பு எப்போதுதான் சாந்தி கொள்ளும்…’
காற்றின் கேள்வியை அறிந்த அவர் மனம் விழித்துக்கொண்டபடியே பதில் தந்தது.
‘காற்று என்பது கரைகளற்ற நதி, நீ ஓடிக்கொண்டேயிருக்கிறாய். உனது கண்கள்தான் உலகியலின் ரகசிய ஈர்ப்பு. உன் இயக்கத்தின் சூட்சும தாதுக்கள்தான் இயக்கத்தின் உயிர்ச்சத்தாகின்றன. நீ ஒரு சாட்சியாகின்றாய். கடந்து போனவைகளின் நடப்பின் எதிர் நாட்களின் சாட்சியாகிறாய். முடிவற்ற சுழல் நதியான உனக்கு இயக்கமே சாந்தி. அலைக்கழிப்பே அமைதி. காற்றே.. நீ அலைய விதிக்கப்பட்டவன். துயரவான்.’
அவர் குரலின் மிருதுவையும் தன்னில் ஏந்தியபடி காற்று தனது துக்கத்தினை அவிழவிட்டபடி கடந்து போய்க் கொண்டே இருந்தது.
”
”
S. Ramakrishnan (உப பாண்டவம் [Uba pandavam])
“
நகுலன் தன் பூனைகள் அளவிற்கு எந்த இலக்கியவாதியையும் நேசித்தது இல்லை. அன்றும் அப்படியே நடந்தது.
நான் நகுலனின் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்துகொண்டபோது அவர் மாறாத சிரிப்புடன் மனிதர்களைவிட பூனைகள் உயர்வானதுதானில்லையா என்று கேட்டார். நான் பூனைகளுக்கு ஒன்பது உயிர் இருப்பதாகச் சொன்னேன். அவர் பலத்த சிரிப்புடன் அவை ஒருபோதும் தற்கொலைக்கு முயன்றதேயில்லை. உலகில் இதுவரை ஒரு பூனையாவது அப்படி முயன்றிருக்கிறதா என்று கேட்டார். பூனை ‘என்ன அசட்டுத்தனம் இது’ என்பதுபோல மெதுவாக நடந்து வீட்டினுள் போனது.
”
”
S. Ramakrishnan (நகுலன் வீட்டில் யாருமில்லை [Nakulan veettil yaarumillai])
“
தொலைவிலிருந்த காட்டில் நெருப்பு பற்றிக்கொண்டு ஊர்ந்து கொண்டிருந்தது. காற்றின் வேகத்தால் அது சுழன்று சுழன்று சப்தித்து வீசியது. நெருப்பின் ஒரு கிளை தனியே பிரிந்து பீஷ்மரின் முன் வந்து நின்றது. அவர் அலைவுறும் நெருப்பினைக் கண்டார். நெருப்பு அவரிடம் கேட்டது,
‘காற்றால் நான் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு நடுக்கமேறிக் கொண்டே இருக்கிறேன். சலனமற்ற இடத்தைக் காட்டக்கூடாதா?’
பீஷ்மர் சொன்னார்.
‘ஒரு ஸ்திரீயின் மனக் குகையில் ஆசையென பிரவேசித்து விடு. பின் உனக்கு சலனமில்லை. அழிவுமில்லை. சுடர்ந்து கொண்டேயிருப்பாய்.
”
”
S. Ramakrishnan (உப பாண்டவம் [Uba pandavam])
“
Even if it is difficult to use DNA repair to directly improve longevity, our knowledge of it underpins our understanding of virtually every process of aging. Genes ultimately control the entire process of life: when and how much of each protein we make; whether our cells continue to live or suddenly stop dividing; how well our cells sense nutrients in their surroundings and respond to them; and how different molecules and cells communicate with one another. Genes control our immune system, which must maintain the delicate balance of reacting to invading pathogens without inducing chronic inflammation.
Direct damage to our DNA, and the cell’s seemingly paradoxical response to it, is only one of the ways our genetic program can be changed as to cause aging. For our DNA has two peculiarities. The first is that its end segments are special and protected, and the consequences of disrupting them are serious.
”
”
Venki Ramakrishnan (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality)