“
தலித்துகள் உணர்ச்சி வசப்படுகிறார்கள் தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணுகிறார்கள் அல்லது எதிர்த்திசைக்கு நகர்ந்து அனைத்தையும் ஏளனம் செய்கிறார்கள் என்றுதான் பொதுச் சமூகம் நம்மைப் பார்க்கிறது. ஆகவே அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசுவதே சரி. உடனே அவர்களை நகலெடுக்கச் சொல்கிறாயா என உங்கள் குரல் உயரும். ஏளனம் செய்வதும் தன்னைத் தாழ்வாக உணர்வதும்தான் நகலெடுப்பது. அந்த நகலை நாம் வரலாற்றில் இருந்து எடுத்துக்கொண்டோம்.
”
”