Bharathiyar Quotes

We've searched our database for all the quotes and captions related to Bharathiyar. Here they are! All 18 of them:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு;-தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
Subramaniya Bharathiyar (mahakavi barathiyar kavithaikal)
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று
Subramaniya Bharathiyar (mahakavi barathiyar kavithaikal)
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான் நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
Subramaniya Bharathiyar (mahakavi barathiyar kavithaikal)
காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன் கரியநிறந் தோன்று தையே நந்த லாலா! பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன் பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா! கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன் கீத மிசக்குதடா நந்த லாலா! தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத் தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!
Subramaniya Bharathiyar (பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal])
akkini kunjondru kanden.adhai angoru kaatidai pondhidai vaithen. vendhu thanindhadhu kaadu.thazal veerathil kunjendrum moopendrum unndo
Subramaniya Bharathiyar (பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal])
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!” ― Subramaniya Bharathiyar
Subramaniya Bharathiyar (பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal])
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென.. நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்
Subramaniya Bharathiyar (பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal])
தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா! மார்பு துடிக்கு தடீ! பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே பாவை தெரியு தடி! மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்குதடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே, நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர் நரகத் துழலுவதோ? கடுமை யுடைய தடீ!எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான் அங்கு வருதற் கில்லை; கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே; நடுமை யரசி யவள்-எதற் காகவோ நாணிக் குலைந்திடுவாள். கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை ஆயிரங் கோடி முறை நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம் பண்ணிய தில்லை யடி!
Subramaniya Bharathiyar (mahakavi barathiyar kavithaikal)
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம் சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு தக்கை யடிக்குது காற்று-தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட வெட்டி யடிக்குது மின்னல்,-கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது; கொட்டி யிடிக்குது மேகம்;-கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று; சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; எட்டுத் திசையும் இடிய-மழை எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா! அண்டம் குலுங்குது,தம்பி!-தலை ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல் மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர் செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்! கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
Subramaniya Bharathiyar (mahakavi barathiyar kavithaikal)
ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா! கூடி விளையாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா! சின்னஞ் சிறுகுருவி போலே-நீ திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு-நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா! பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா! வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது மனிதர்க்கு தோழனடி பாப்பா! வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா! காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா! தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன தீங்குவர மாட்டாது பாப்பா! பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா! அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா! தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ திடங்கொண்டு போராடு பாப்பா! தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா! அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத் தொழுது படித்திடடி பாப்பா! செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா! வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா! கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப! வேத முடையதிந்த நாடு,-நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு; சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா! சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர். உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்; வயிர முடையநெஞ்சு வேணும்;-இது வாழும் முறைமையடி பாப்பா!
Subramaniya Bharathiyar (mahakavi barathiyar kavithaikal)
kaatruveliyidai kannamma nindran kaadhalai yenni kalikkindren amudhootrinai otha idhazhgalum nilavoori thadhumbum vizhigalum pathu maatru ponnotha nin meniyum indha vaiyathil yaanula mattilum yenai vetru ninaivindri thetriye ingor vinnavanaaga puriyume.. indha kaatru veliyidai kannamma nindran kaadhalai yenni kalikkindren nee yenathinnuyir kannamma yendha neramum nindranai potruven thuyar poyina poyina thunbangal ninai ponnena konda pozhuthile yendran vaayinile amudhoorudhe kannamma yendra per sollum pothile uyir theeyinile valar jothiye nidran sindhanaiye yendhan sithame indha kaatru veliyidai kannamma nindran kaadhalai yenni kalikkindren
Subramaniya Bharathiyar
Chinnan chirukkiLiyE kaNNammA selvak-kaLanjiyamE Ennaik-kali theerthey ulagil Etram puriya vandAi PiLLaik-kaniyamudE kaNNammA pEsum por-chittiramE ALLi aNaittiDavE en munnE Adi varum tEnE Odi varugaiyilE kaNNammA uLLam kuLirudaDi Adi-tiridhal kaNDAl unnaip-pOi Avi tazhuvudaDI Ucchi tanai mughandAl garuvam Ongi vaLarudaDi Mecchi unnai oorar pugazhndAl mEni shilirkkudaDI Kannattil muttamittal uLLam thAn kaL veri koLLudaDi Unnait-tazhuvidilO kaNnammA unnatham,AgudaDI Un kaNNil neer vazhindAl ennenjil udiram koTTudaDi En kaNNin pAvaiyanrO kaNNammA ennuyir ninradanrO?
Subramaniya Bharathiyar
ninnai charaNadainthEn, kaNNammA ninnai charaNadainthEn ponnai, uyarvai, pugazhai virumbidum ennai kavalaigaL thinna thagAthena.. ninnai midimaiyum achamum mEvi en nenjil kudimai pugunthana, kondr(u)avai pOkkena - ninnai thunbam ini illai, sOrvillai sOrvillai, thORpillai anbu neRiyil aRangaL vaLarththida nallavai nAttida, theeyavai Ottida ninnai charaNadainthEn, kaNNammA ninnai charaNadainthEn!
Subramaniya Bharathiyar
12. உலகத்தை நோக்கி வினவுதல் நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க
Subramaniya Bharathiyar (Gnana padalgal palvagai padalgal andSuya Sarithai (Tamil))
So I am an Indian who's mother tongue is Tamil and Ancestral language is Telugu, Intellectual legacy from Palm leaves is in Vatteluzhuthu (Tamil + Malayalam Mixture), So wherever I go for research studies on Environment/ Ecology/ Biology, I represent myself as INDIAN (Who is comfortable in English) unless I marry a Non - Indian girl, and I represent Tamil Philosophy for defense mechanisms, science, business and all other possible spiritual, social and all other dimensions that are focused. The thing is learning Hindi, Sanskrit, Kannada or any foreign language is not a big deal, if i put effort for 3 to 6 months I can easily grab a language from grammatical foundations to advanced speaking but even after learning another language, at some point of my time in future, either I have become a biological researcher and/or astronaut as I dream of , but at that moment If I do not have the attributes of my current birth place, then there will be a guy or a girl or a leader or even a child who would easily question me that you have forgotten your mother tongue either for money or for women or for passion, so how can we trust you that you will protect/ guide us? So previous life carnation was Rajput and before that was time frame Europe, those things are in my mind and I will never forget, but in this very life I have to represent Tamil Philosophy and Ideology, As English is a common communicative and International language in science and technology, there is no one can deny English, Even lord Krishna was embarrassed just because he was Yadav. So although I have knowledge of all Indian gods and Goddesses and respecting all religions, castes and customs within India, within earth, within universe and beyond, I represent in English with Tamil Philosophy. So wherever I go for research studies on Environment/ Ecology/ Biology, I represent myself as Indian unless I marry a Non - Indian girl, and I represent Tamil Philosophy for defense mechanisms, science, business and all other possible spiritual, social and all other dimensions that are focused. Now choosing Guru is important before starting your passionate journey (Mine is science), so while choosing Guru, three things to remember, 1) Guru must be Knowing context specific problems, 2) Guru must not have lived immoral life 3) Guru must have withstand enormous pressure and opposition to show his/her potential on specific subject in his/her time 4) You can also choose more Guru as you move on in your life but starting point or First Guru must be from your Place My Gurus That I really Consider as my gurus 1) Mahakavi Subramanya Bharathiyar 2) Tholkappiar 3) Carl Sagan 4) Stephen Hawking 5) Bear Grylls 6) Siddhartha 7) Lord Ramachandra 8) Lord Shiva 9) Lord Dasarat (Indra) 10) All goddesses 11) Lilith (She was portrayed as bad but she was not bad) 12) Lord prometheus 13) Lord Surya 14) Lord Krishna (Sometimes because I hate him) 15) Sita
Ganapathy K Siddharth Vijayaraghavan
சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள்.
Subramaniya Bharathiyar (Bhagavad Gita (Tamil Edition))
வையகம் காப்பவ ரேனும் -சிறு வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும், பொய்யக லத்தொழில் செய்தே -பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.
Subramaniya Bharathiyar (பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavithaigal])
ஐயமுற்றோன் அழிவான்
Subramaniya Bharathiyar (BHAGAVAD GITA (Tamil))