“
பன்னிரண்டு வருடம். காத்திருப்பின் பன்னிரண்டு வருடம். அவன் வரத்தான் செய்தான். மாதவன். என் கணவன். என் பகைவன். என் ஒரே ஆண். என் இரண்டு குழந்தைகளின் தந்தை. வெள்ளைச் சட்டைக்கு மேல் சிவந்த ஒரு காஷ்மீர் சால்வை உடுத்தி, ஒருபக்கமாகத் தளர்ந்த அவன், நொண்டி நொண்டி வந்தான். நான் ஒரு ராஜநாகம் போன்று படம் விரித்து அவனை
எதிர்கொண்டேன். ரத்தத்துக்காக எனது நாக்கு தவித்தது. அவனுடைய கச்சிதமான முகத்தில் நடுக்கம் விஷம்போல் வியாபித்தது. அவன் அழகன். ஈரமான கண்கள். உயர்ந்த மூக்கு. சிரிக்கும்போது கன்னத்தில் விழும் அழகான குழி. அவன் என்னைப் பேயைப் பார்ப்பது போலப் பார்த்தான். எனது உதிர்ந்துபோன முன்பற்கள். குழிவிழுந்த கண்கள். எலும்பும் தோலுமான உடல். மொட்டைத் தலை. கிழிந்துபோன புடவை. பழிவாங்கலை நிறைவேற்றுவதற்காக நான் மண்டியிட்டு ஊர்ந்து அவன் முன்னால் பிச்சைப் பாத்திரத்தை நீட்டினேன். ‘ஏழைக்கு ஏதாவது கொடுங்கள் ஐயா!' அவன் கட்டுப்பாட்டை இழந்து, 'துளசீ' என்று கத்தினான். நான் யாசிப்பதை முடித்துக்கொண்டேன். பல் இல்லாத வாயைக் காட்டி வெள்ளந்தியாகப் புன்னகைத்தேன். 'துளசி செத்துப்போய்விட்டாள், மாதவன் ஐயா. இது மீரா... மீராசாது...
”
”
K.R. Meera (മീരാസാധു | Meerasadhu)