“
செம்மறி ஆடுகளைச் சாதாரணமாக வெளியார்கள் யாரும் பார்க்கும்போது, பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் தெரியும். ஆனால், அவைகளின் கணக்கற்ற நிறமாற்றங் களுக்குத் தகுந்தபடி கிடையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் என்று ஒவ்வொரு நிறப்பெயர் உண்டு. அதன் உடம்பில் ஏதாவது ஒரு வச்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வச்சமே அதனுடைய பெயராகிவிடுவதும் உண்டு. நிறப்பெயரைச் சொன்னாலே போதும்; அது இன்ன துண்டத்தைச் சேர்ந்த ஆடு, இன்னாருடையது அது என்று சொல்லிவிடுவார்கள். தப்பிதமாகப் பாங்கு பிரிக்கப்படுவதைக் கண்ட கீதாரி ராமசுப்பா நாயக்கர், தொலைவில் இருந்தவாறே சத்தம் போட்டார்:
”
”
கி. ராஜநாராயணன் (கிடை (Kidai) (Classic Novellette) (Tamil Edition))