“
பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்திலும் நல்லெண்ணத்தை விதைத்தாலும் அது நல்ல விளைவைத் தராது.
”
”
C.N. Annadurai (ஏ, தாழ்ந்த தமிழகமே! மற்றும் நிலையும் நினைப்பும்: சொற்பொழிவுகள்)
“
சாதிப் பின்னொட்டு ஒழிப்புத் தீர்மானம் சேலம் 1944 திராவிடர் கழக மாநாட்டில் அண்ணா முன்மொழிய நிறைவேற்றப்படுகிறது.
”
”
C.N. Annadurai (அண்ணா நானூறு: Anna 400 (Perarignar Anna's Writings and Speeches Book 4) (Tamil Edition))
“
வீடு எங்கனமோ அங்ஙனம்தான் நாடு இருக்கும். ஒரு மொழியே பேசும் ஒரு நாட்டவரிடையே பல வகைப்பட்ட பிளவுகளும், சச்சரவுகளும் காணப்படும். பல மொழிகள் பேசும் பல நாட்டவரையும், ஒரு பொதுமொழி கற்பதனால் ஒற்றுமையாக்கி விடுதல் என்பது முடியாததாகும்.
”
”
C.N. Annadurai (அண்ணா நானூறு: Anna 400 (Perarignar Anna's Writings and Speeches Book 4) (Tamil Edition))
“
சட்டத்தின் மூலமாகவோ, கட்டளையின் மூலமாகவோ குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலமாகவோ ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியாது. ஒற்றுமை என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். நமது எண்ணங்கள் ஒன்றிணைந்திட செயல்படவேண்டும். வெறும் உதட்டளவு பேச்சினால் ஒற்றுமை வந்துவிடாது.
”
”
C.N. Annadurai (அண்ணா நானூறு: Anna 400 (Perarignar Anna's Writings and Speeches Book 4) (Tamil Edition))
“
நீதி : முனியுங்கவரே! என் மீது என்ன தவறு? பரசுராமர், தன் தாயின் தலையை லெட்டியது. ஜமதக்னி கட்டளையால், இலங்கேசன், பரசுராமருக்கு இரக்கம் இல்லை என்று குற்றம் சாட்டினான். என் மீது மாசு இல்லையே!
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
ஆஸ்ரமங்களிலே உள்ள மான்தோல் ஆசன்ங்கள், இரக்கத்தின் அடையாளச் சீட்டுகளா? விதவிதமான யாகங்கள், இரக்க லட்சியவாதிகளின் செயலா? எங்கே இரக்கம்? ஏன் இல்லை. அவர்கள் அர்க்கரல்லவா? நான் மட்டும் அரக்கன்?
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
இரா : மன்னர்கள் பல மனைவியரை மணம் செய்வது முறைதானே? கம் : ஆமாம்! ஆனால் இராமன் ஏக் பத்தினி விரதனாயிற்றே! இரா : அவள் அறியமாட்டானே! ஆகவேதான். தன் ஆசையைத் தெரிவித்தாள். அன்றுவரை அவள் எந்த ஆடவரிடமும் வலிய சென்று காதலை வெளியிடும் வழுக்கி விழுந்தவளல்ல! அன்று ஓர் வடிவழகனைக் கண்டாள்; மன்றாடி நின்றாள். இரக்கம் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாமே! விரதத்துக்குப் பங்கம் வரக்கூடாதென்பதிலே விசேஷ் அக்கறை கொண்டு, அவளை நிராகரிப்பதானாலும்; இப்ப்டி அலங்கோலப் படுத்தாது இருந்திருக்கலாமே! அவளுடைய நாசியைத் துண்டித்தபோது இராம -இல்ட்சுமணர்கள் இரக்கத்தை எத்தனை யோசனை தூரத்திலே விரட்டினார்கள்? அவர்கள் அரக்கரல்லவா?
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
ஒரு நாள் சிக்கின சூர்ப்பனகை, எந்த நாளும் எலர் முன்பும் வரமுடியாத நிலையைப் பெற்றாள். என் கைதியாகப் பலநாள் இருந்த சீதை, செனந்தர்யவேதிபாய், சகல செளபாக்கியங்களையும். அயோத்திப்பிலே பிறகு அனுபவித்தாள். ஆனால் தான் அரக்கன்...
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
இரா: (கைகேயியைப் பார்த்து) ஏண்ம்மா கைகேயி! இராமன் காடு போகிறான் என்பதைக் கேட்டு பூனையும், யானையும், குதிரையும், குழந்தையும், பூவும், காவும், கினியும், நாகணவாய்ப் பட்சியும் மனம் உருகி அழதனவாமே! அந்த நேரத்திலும் தங்கள் மனம் இனகவில்லையோ?
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
இரா : உமக்கு மன மயக்கம் ஏற்படலாமா? யாக குண்டத்தருகே அமர்ந்திருந்த ரிஷி பத்தினிகளிடம் ஏற்பட்டதே மன மயக்கம் - கண்டித்தனரா - தண்டித்தனரா - தேவ பதவியை இழந்தீரா? - இல்லையே - காமந்தகார ரேட்டை புரிந்தீர் - புரிந்தும், அக்னி தேவனாக்வே கொலு வீற்றிருக்கிறீர் - என்னையோ, இந்தக் கம்பர் அரக்கனாக்கினார் - என் ராஜ்யம் அழிந்தது தர்ம சம்மதம் என்று வாதாடுகிறார். நான் அரக்கன்! ஆனால் நான் செய்ததில்லை, தாங்கள் செய்யத் துணிந்த, அக்கிரமத்தை…
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
இரா : தவம், ஆரிய முறை. அதை என் இனக் கலாச்சார முறைப்படி நான் ஆதரிக்க முடியாது.’யாகம்' என்பது ஜீவன்களை வதைத்து, பொருளைப் பாழாக்கி, மக்களை ஏய்க்கும் ஆரிய தந்திரம் என்பது, என் இனத்தின் சித்தாந்தம் ஆகவே, என் ஆட்சிக்குட்பட்ட இடங்களிலே, ஆரியர்பிரவேசித்து, என் கலாச்சாரத்துக்கு விரோதமான காரியத்தைச் செய்து, அதன் மூலம் என் கட்டளையை மீறினதால் நான் யாகங்களை அழித்தேன்.
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
இரா : அது எப்படி குற்றமாகும்? என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்று தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப்பவர்களைத் தகண்டிக்கவும் எர்னக்கு அரச உரிமை உண்டு. அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்ல்மேதயாகத்தையா அழித்தேன்?
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக அவனுடைய இராஜ்ஜியத்தில், அவ்ன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குலமுறைக்குத் தனது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய ராமன், ஆரிய் பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அறரியத் தவசியைக் கொன்றான். அவன் அது என் உரிமை என்றான். வின் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா?
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
பழம், பால், மது. மாமிசம், மலர் - எதனையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி’ என்று தெரிவித்தார்கள். ‘சரி, புத்தி கூறு: மிரட்டு; கொன்று டோடுவேன் என்று சொல் பிடிவாதம் கூடாது என்று தெரிவி; தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காதிபதி, ஒரு தையலின் கண்ணீருக்கு அஞ்சமாட்டான் என்று ‘சொல்’ என்றுதான்.
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
இரக்கம் இல்லாதார் அரக்கர் என்றால் அனைவரும், ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்தான்..
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
யாகம் காணச் சென்றீர், மோகம் கொண்டு விட்டீர் - யாகத்தில் ஈடுபட்டிருந்த சப்தரிஷிகள் மனைவிமார் மீது. இதிரியங்களை அடக்கியதால் இந்தத் தேவ பதவி பெற்றீர்-உம்மை வணங்கி வரம் கேட்டனர் தவசிகள் - நீரோ, காமம் கக்கும் கண்களுடன் ரிஷி பத்திணிகளைப் பார்த்தபடி நின்றீர். - - அவர்களைக் கற்பழிக்கத் திட்டமிட்டீர். உண்டா? இல்லையா?
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
இரா : சிவபக்தர், சீற்றம் தணியாதவராய் இச்சிசு, அதன் தாய்ப்பாலைக் குடித்திருக்குமன்றோ - அந்தப் பாலிலே சிவசொத்து கலந்திருந்ததன்றோ - ஆகவே சிசுவும் கொல்லப்படத்தான் வேண்டுமென்று கூறி, சிசுவைத் தூக்கி மேலுக்கு எறிந்து, கீழே விழும்போது, இடையில் வாளை ஏவி, குழந்தையை இரண்டு துண்டு ஆக்கினார். இரக்கமற்று. இறைவனின் நற்தொண்டன் என்று தன்னைக் கூறிக் கொண்டு, இரக்கமற்ற இவர் அரக்கரள்: - கம்பரே! நான் அரக்கன்.
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
இரக்கம் இருந்ததா? துளி பெண்கள் அழுதபோது பால் வடியும் முகமுடைய சிக கதறியபோது? - இருந்ததா - இரக்கம் காட்டப்பட்டதா கோட்புலியாரே, இரக்கம் காட்டினிரார் இரக்கமற்றுப் படுகொலை செய்தவர் நாயனார் - அடியார் - கொலைக் கஞ்சாக் கோட்புலி! கட்டை விரலை காணிக்கையாகப் பெற்ற துரோணர் - தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசுராமன் - பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் இரக்கமின்றி கைவிடத் துணிந்த விசுவாமித்திரன் - இவர்களெல்லாம் தவசிகள் - ரிஷிரேஷ்டர்கள் - பரமன் அருளைப் பெற்றவர்கள் – நீதிதேவா! நான் அரக்கன் - இவர்கள் யார்!
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
சம்: யோயொமல் பொய் பேசுகிறாய் – இராமா! கூசாது பேசுகிறாய் உன் ஆட்சியிலே, சிலருக்குத்தவம் செய்தால், ஆதரவும், என் போலச் சிலருக்குத் தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி என்கிறாய்.
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
வால் : நீர் கூறுவது உண்மையானால், கர்ப்பவதியான ஜானகியை காட்டிற்கு அனுப்பினானே சந்தேகப்பட்டு. அதிலே களங்கம் இல்லையர், கம்பரே! துரோ : அதோடு விட்டாரா! கூரையு நதிக்கரையில் இறந்த கிடந்த இராமச்சந்திரன், மீண்டும் அயோத்திக்கு வந்து, ஜானகி சமேதராய் பட்ட பிஷேகம் செய்து கொண்டதாக வல்லவோ எழுதிவிட்டார். பட்டுப்பேர்ன இராமச்சந்திரனுக்குப் பட்டாபிஷேகமாம் என்ன விந்தை!
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])
“
விளங்கவில்லையே, தங்களின் வாதம்
”
”
C.N. Annadurai (நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam])