Ar Rumi Quotes

We've searched our database for all the quotes and captions related to Ar Rumi. Here they are! All 100 of them:

I wish I'd been accepted sooner and better. When I was younger, not being accepted made me enraged, but now, I am not inclined to dismantle my history. If you banish the dragons, you banish the heroes--and we become attached to the heroic strain in our personal history. We choose our own lives. It is not simply that we decide on the behaviors that construct our experience; when given our druthers, we elect to be ourselves. Most of us would like to be more successful or more beautiful or wealthier, and most people endure episodes of low self-esteem or even self-hatred. We despair a hundred times a day. But we retain the startling evolutionary imperative for the fact of ourselves, and with that splinter of grandiosity we redeem our flaws. These parents have, by and large, chosen to love their children, and many of them have chosen to value their own lives, even though they carry what much of the world considers an intolerable burden. Children with horizontal identities alter your self painfully; they also illuminate it. They are receptacles for rage and joy-even for salvation. When we love them, we achieve above all else the rapture of privileging what exists over what we have merely imagined. A follower of the Dalai Lama who had been imprisoned by the Chinese for decades was asked if he had ever been afraid in jail, and he said his fear was that he would lose compassion for his captors. Parents often think that they've captured something small and vulnerable, but the parents I've profiled here have been captured, locked up with their children's madness or genius or deformity, and the quest is never to lose compassion. A Buddhist scholar once explained to me that most Westerners mistakenly think that nirvana is what you arrive at when your suffering is over and only an eternity of happiness stretches ahead. But such bliss would always be shadowed by the sorrow of the past and would therefore be imperfect. Nirvana occurs when you not only look forward to rapture, but also gaze back into the times of anguish and find in them the seeds of your joy. You may not have felt that happiness at the time, but in retrospect it is incontrovertible. For some parents of children with horizontal identities, acceptance reaches its apogee when parents conclude that while they supposed that they were pinioned by a great and catastrophic loss of hope, they were in fact falling in love with someone they didn't yet know enough to want. As such parents look back, they see how every stage of loving their child has enriched them in ways they never would have conceived, ways that ar incalculably precious. Rumi said that light enters you at the bandaged place. This book's conundrum is that most of the families described here have ended up grateful for experiences they would have done anything to avoid.
Andrew Solomon (Far from the Tree: Parents, Children, and the Search for Identity)
Life is a balance of holding on and letting go
Jalal ad-Din Muhammad ar-Rumi
i only see myself coming and going for you i only see myself wishing and looking for you even if i falter everywhere in this world isn’t it because i see nothing but you
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Love Poems of Rumi)
Be a witness, not a judge. Focus on yourself, not on others. Listen to your heart, not to the crowd.
Jalal ad-Din Muhammad ar-Rumi
There is a sea not far from us. It is invisible, but it is not hidden. It is forbidden to speak of it. Yet it is a sin and a sign of ingratitude not to.
Jalal ad-Din Muhammad ar-Rumi
i shall talk to you with no words i shall whisper to you no ears will hear even if among the crowd i tell my story i know my tales can only nest in your ears
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Love Poems of Rumi)
All human beings are not the same. Some hymenoptera make poison for their stingers. Others make honey. Some deer just make dung, while others make musk from the same grass.
Jalal ad-Din Muhammad ar-Rumi (Rumi's Little Book of Love and Laughter)
நன்மை என்பது தீமையை விடுவதே.
Jalal ad-Din Muhammad ar-Rumi (Fihi Ma Fih)
Out beyond ideas of wrongdoing and rightdoing, There is a field. I'll meet you there.
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Essential Rumi)
As you start to walk the path will appear.
Jalal ad-Din Muhammad ar-Rumi
Vem, te direi em segredo aonde leva essa dança. Vê como as partículas do ar e os grãos de areia do deserto giram desnorteados. Cada átomo feliz ou miserável, gira apaixonado em torno do sol.
Jalal ad-Din Muhammad ar-Rumi (Rumi's Book of Poetry: 100 Inspirational Poems on Love, Life, and Meditation)
நான் என் மனதிற்கினியவனைக் காதலித்து இன்றிரவு இன்புற்றுள்ளேன். என் கவலைகளை விட்டொழித்து எனை விடுவித்துக் கொண்டுள்ளேன், நாட்டியம் ஆடியும் ஆராதனை பல புரிந்தும். இறைவா, விடியலுக்கான சாவி இன்றிரவு தொலைந்து போகட்டும்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
The breeze at dawn has secrets to tell you Don’t go back to sleep! You must ask for what you really want. Don’t go back to sleep! People are going back and forth across the doorsill where the two worlds touch, The door is round and open Don’t go back to sleep!
Jalal ad-Din Muhammad ar-Rumi
It's a habit of yours to walk slowly. You hold a grudge for years. With such heaviness, how can you be modest? With such attachments, do you expect to arrive anywhere? Be wide as the air to learn a secret. Right now you're equal portions clay and water, thick mud.
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Essential Rumi (2020): Translations By Coleman Barks with John Moyne)
If you hope for a moment of peace in love, You don't belong in the ranks of lovers here. Be hardy like the thorn, of single point, That the rose may grow beside you, near and dear. ******** காதலில் ஒரு கணமேனும் நிம்மதியை நீ வேண்டினால் காதலரின் கூட்டத்தில் உனக்கென்ன வேலை? முள்ளைப் போல் இரு ஒரு புள்ளியில் குவிந்து; அப்போது காதலி இருப்பாள் உன்னுடன் உன்னருகில் ஒரு ரோஜாவாய் மலர்ந்து!
Jalal ad-Din Muhammad ar-Rumi
This being human is a guest house, Every morning a new arrival. A joy, a depression, a meanness, some momentary awareness comes as an unexpected visitor. Welcome and entertain them all! Even if they are a crowd of sorrows, who violently sweep your house empty of its furniture, still treat each guest honourably, He may be clearing you out for some new delight. The dark thought, the shame, the malice, meet them at the door laughing, and invite them in. Be grateful for whoever comes, because each has sent as a guide from beyond.
Jalal ad-Din Muhammad ar-Rumi
Close both eyes to see with the other eye. Open your hands, if you want to be held. Sit down in this circle. Quit acting like a wolf, and feel the shepherd's love filling you. At night, your beloved wanders. Don't accept consolations. Close your mouth against food. Taste the lover's mouth in yours. You moan, "She left me." "He left me." Twenty more will come. Be empty of worrying. Think of who created thought! Why do you stay in prison when the door is so wide open? Move outside the tangle of fear-thinking. Live in silence. Flow down and down in always widening rings of being.
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Essential Rumi (2020): Translations By Coleman Barks with John Moyne)
Close both eyes to see with the other eye. Open your hands, if you want to be held. Sit down in this circle. Quit acting like a wolf, and feel the shepherd's love filling you. At night, your beloved wanders. Don't accept consolations. Close your mouth against food. Taste the lover's mouth in yours. You moan, "She left me." "He left me." Twenty more will come. Be empty of worrying. Think of who created thought! Why do you stay in prison when the door is so wide open? Move outside the tangle of fear-thinking. Live in silence. Flow down and down in always widening rings of being.” (page 3)
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Essential Rumi (2020): Translations By Coleman Barks with John Moyne)
Drink all your passion, and be a disgrace. Close both eyes to see with the other eye. Open your hands, if you want to be held. Sit down in this circle. Quit acting like a wolf, and feel the shepherd's love filling you. At night, your beloved wanders. Don't accept consolations. Close your mouth against food. Taste the lover's mouth in yours. You moan, "She left me." "He left me." Twenty more will come. Be empty of worrying. Think of who created thought! Why do you stay in prison when the door is so wide open? Move outside the tangle of fear-thinking. Live in silence. Flow down and down in always widening rings of being.
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Essential Rumi)
This body is a guesthouse each morning someone new arrives. Welcome them all for they may be messengers from the invisible. Do not feel burdened by them or they may go back to non-existence. Each time a thought enters your heart treat it as an honored guest, your worth is shown by the thoughts you entertain. Embrace sorrowful thoughts for they sweep the house of your heart clean, scatter the withered leaves, and pull out the twisted roots, preparing the ground for the new shoots of joy. What sorrow takes away from the heart it replaces with something better. Without the fury of thunder and lightning the plants will be scorched by the sun. Be grateful for all you receive, good and bad alike, for it may be a gift from the treasury of Spirit that will bring the fulfillment of your most secret desire.
Jalal ad-Din Muhammad ar-Rumi (Rumi's Little Book of Life: The Garden of the Soul, the Heart, and the Spirit)
Whatever motion comes from a drowned person is not really from him but from the water. If he is still thrashing about in the water, then he cannot be called drowned. If he can cry out, "Help! I'm drowning!" then he cannot be said to have drowned yet. People think that to say "I am God" is a claim of greatness, but it is actually extreme humility. Anyone who says "I am God's servant" predicates two existences, his own and God's, while the one who says "I am God" nullifies himself-that is, he gives up his own existence as naught. It is said that "I am God" means: "I do not exist; everything is He. Existence is God's alone; I am utter, pure nonexistence; I am nothing." There is more humility in this than any claim to greatness, but people do not comprehend. When a man acknowledges his servitude to God, he is aware of his act of being a servant. It may be for God, but he still sees himself and his own act along with seeing God. He is not "drowned"; drowned is he in whom there is no motion or action but whose movement is the movement of the water.
Jalal ad-Din Muhammad ar-Rumi
முதல் காதல் கதையை நான் கேட்டவுடன் உன்னைத் தேடத் துவங்கினேன், எவ்வளவு கண்மூடித்தனமானது அது என்பது தெரியாமலேயே. காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக்கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக இருந்து வருகிறார்கள் காலங்காலமாக.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
உனது ஆன்மாவிலிருந்து எனது ஆன்மா எதையோ செவிமடுத்த அந்தப் புலரி என் நினைவில் படர்கிறது. உனது ஊற்றிலிருந்து பருகினேன், ஒரு பேரலை ஆட்கொண்டது என்னை.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
தோல் குருதி எலும்பு மூளை ஆன்மா என எனக்குள் வியாபித்துள்ளாய் நீ. நம்புவதற்கோ மறுப்பதற்கோ இடமேதும் இல்லை. அந்த இருத்தல் அன்றி, இந்த இருப்பு வெறுமையே.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
நேற்றிரவு அக்கூட்டத்தில் உன்னைக் கண்டேன். ஆரத்தழுவ இயலவில்லை வெளிப்படையாக என்னால். ஆனாலும், உனது கன்னத்தின் அருகே உதடுகளைப் பொருத்தினேன். எதையோ ரகசியமாய்ச் சொல்பவனைப் போல.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
ஒரு சூஃபி துறவி இன்னொருவரிடம் கேட்கிறார்: கடவுளின் இருப்பைக் குறித்து உங்களுடைய பார்வை என்ன ? எதையும் நான் பார்க்கவில்லை. ஆனால் உரையாடலைத் தொடங்குவதற்கு ஏதுவாக உங்களுக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். கடவுளின் இருப்பு இங்கே எனக்கு முன்னால் இருக்கிறது. இடதுபுறத்தில் இருப்பது ஒரு நெருப்பு. வலதுபுறத்திலோ அழகானதோர் ஓடை. நெருப்பை நோக்கி சென்ற குழு நெருப்பிற்குள் இறங்குகிறது. மற்றொரு குழுவோ பாயும் நீரோடையை நோக்கி நடக்கிறது. எது ஆசிர்வதிக்கப்பட்டது எது சபிக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. நெருப்பில் நடப்பவர் திடீரென்று ஓடையில் தோன்றுகிறார். நீர் பரப்பிற்கு அடியில் மூழ்கியபடி செல்லும் ஒரு தலையோ நெருப்பிலிருந்து முளைத்து எழுகிறது. பெரும்பாலான மக்கள் நெருப்பிற்குள் செல்வதினின்றும் தம்மைக் காத்துக்கொள்கிறார்கள், ஆனபோதிலும் அதிலே மூழ்கி மூச்சை விடுகிறார்கள். குளிர்ந்த தண்ணீரை விரும்பி அதைத் தம் வழிபாடாகக் கொண்டவர்களும் இந்த நிலைமாற்றத்தால் ஏமாற்றப்படுகிறார்கள் தந்திரம் மேலும் செல்லுபடியாகிறது. நெருப்பின் குரல் உண்மையைச் சொல்கிறது, நான் நெருப்பு அல்ல, நீரூற்று. தீப்பொறிகளைப் பொருட்படுத்தாமல் என்னிடம் வந்துவிடுங்கள் நீங்கள் கடவுளின் நண்பராக இருந்தால், நெருப்பு உங்களுக்கு நீர். நீங்கள் நூறாயிரம் விட்டில் பூச்சி சிறகுகளை வைத்திருக்க விரும்புகிறீர்கள். ஆகவே, ஒரு இரவுக்கு ஒரு ஜோடி என அவற்றை நீங்கள் எரிக்கலாம். விட்டில் பூச்சி ஒளியைக் கண்டு நெருப்புக்குள் செல்கிறது. நீங்கள் நெருப்பைக் கண்டு ஒளியை நோக்கிச் செல்லவேண்டும் நெருப்பு என்பது உலகை விழுங்க கடவுளால் உருவாகப்பட்டது. நீர், உலகைக் காக்கும். எப்படியோ ஒவ்வொன்றும் மற்றவற்றின் தோற்றத்தை கொண்டுள்ளன. இந்தக் கண்களுக்கு இப்போது தண்ணீர் போல் தோன்றுவது எரிகிறது. நெருப்பு போன்று தோற்றமளிப்பதன் உள்ளிருப்பதுவோ ஒரு பெரிய நிம்மதி.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நான் உன்னைக் காண விரும்புகிறேன். உன் குரலினை அறியவும். நீ முதன்முதலாகத் தெருவின் மூலையில் திரும்பி வரும்போது உன்னை அடையாளம் காணவும். நீ கிளம்பிச் சென்ற அறைக்கு நான் வரும்போது உனது வாசனையை உணரவும். உந்தன் குதிகால் உயரத்தையும் உன்னுடைய காலின் அடிவைப்பையும் அறிந்து கொள்ளவும்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
எல்லாக் கண்களிலும் காதுகளிலும் இருந்து மறைக்கப்பட்டுள்ள நம் ஆன்மாவைப் பற்றி ஒருவருக்கொருவர் கூறுவோம். உதடுகளற்ற ரோஜாவைப்போல சிரிக்கவும் ஒரு சீரிய சிந்தனையைப்போல் அமைதியாக இருக்கவும் செய்வோம். வீணாக வார்த்தைகளை விரயமாக்கும் பேச்சாளர்களை தவிர்த்து இரகசியத்தை ஆன்மாவைப்போல அமைதியாகப் பகிர்ந்துகொள்வோம். நம் கைகளை பிணைத்துக்கொண்டு நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பையும் கேட்டவாறே மௌனத்தில் ஒன்றாக இருப்போம். நமது விதியைக் குறித்து கடைசி விவரம் வரை அறிந்திருக்கிறது தெய்வீக நியதி. நம் கதையை அமைதியாக அது சொல்லட்டும்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
இதயத்தை அது ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டாலும்கூட தாழ்வாகப் பார்க்காதே, எந்த நிலையிலும் உயர்ந்த புனிதர்களின் போதனைகளை விடவும் இதயம் மதிப்புமிக்கது. உடைந்த இதயம் கடவுள் உற்றுநோக்கும் இடம். இதயத்தை சரிசெய்யும் ஆன்மாதான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி ! சுக்குநூறாக உடைந்துபோன இதயத்திற்கு ஆறுதல் சொல்வது கடவுளுக்காக வேண்டி யாத்திரை செல்வதை விடவும் சிறந்தது. கடவுளின் பொக்கிஷங்கள் பாழடைந்த இதயங்களில் புதைந்துள்ளன. சேவைக்கான அங்கியை அணிய நேர்ந்தால் ஓர் அடிமை அல்லது வேலைக்காரனைப் போல இதயங்களுக்கு சேவை செய்யுங்கள் ! உங்கள் கண் முன்பாக அனைத்து ரகசியங்களுக்குமான பாதைகள் திறக்கும். உங்களுக்கு அமைதியும் மகிமையும் வேண்டுமென்றால், இகவாழ்வின் மரியாதைகளை மறந்துவிட்டவர்களாக இதயங்களை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள். இதயத்தின் உதவியாளராக நீங்கள் ஆகிவிட்டால், ஞானத்தின் ஊற்றுகள் உங்கள் உள்ளத்தில் இருந்து பாயும். உங்கள் வாயினின்றும் ஒரு சிற்றோடைபோல உயிர் நீர் பெருகிவிடும். உங்கள் மூச்சு இறைவனின் மூச்சுபோல மூலிகையாக மாறும். அமைதியாய் இருங்கள் உங்கள் தலையில் உள்ள ஒவ்வொரு முடியிலும் இருநூறு நாக்குகள் இருந்தாலும் உங்களால் இதயத்தை விளக்க முடியாது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
ஒவ்வொரு மூச்சிலும் பக்தியின் விதைகளை விதைக்கிறேன். நான் இதயத்தின் விவசாயி. இரவும் பகலும் சங்கமத்தின் முகத்தை பார்க்கிறேன். நான் கடவுளின் கண்ணாடி. ஒவ்வொரு கணமும் உளி கொண்டு என் விதியை வடிக்கிறேன். நான் என் ஆன்மாவின் தச்சன்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
ரோஜாவிடம் அதன் இதழ்களை மலரச் செய்திட என்ன சொல்லப்பட்டதோ அது இங்கே எனது இதயத்திலும் என்னிடம் உரைக்கப்பட்டது. சைப்ரஸ் மரத்திடம் உறுதியாகவும் நேராகவும் வளர்வதற்காக என்ன சொல்லப்பட்டதோ மல்லிகை மலரிடம் அவ்விதமாக அது மலர்ந்திருக்க என்ன கிசுகிசுக்கப்பட்டதோ மாதுளம் பூவினை மனித முகத்தைப் போல் எது சிவக்க வைத்ததோ அது இப்போது என்னிடம் கூறப்படுகிறது. நான் வெட்டுகுகிறேன். மொழியில் சொல்வன்மையை முன்னிறுத்துவது எதுவாயினும், அதுவே இங்கே நிகழ்கிறது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
அன்பின் சித்ரவதைக் கூடத்தில் பலவீனமானவர்களையோ உருக்குலைந்து போனவர்களையோ யாரும் பொருட்படுத்துவது இல்லை. அனைவரிலும் சிறந்தவர்களை மட்டுமே அவர்கள் கொல்வதற்கு தேர்கிறார்கள் இந்த மரணத்திலிருந்து தப்பி ஓடிவிடாதீர்கள். காதலின் பொருட்டு மரிக்கத் தயங்குபவன் எவனும் இறந்த சவத்திற்கு சமம்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நீந்திய இடத்திலிருந்து நகர்ந்திடும் மீன் போல காலத்தின் கத்தி அதன் உறையினின்றும் நழுவுகிறது. மென்மேலும் நெருக்கமாக இருக்க விழைவது உடலின் இச்சை. இணைவை விழையாதே! அதையும் கடந்தவொரு அணுக்கம் இருக்கிறது. கடவுள் எதற்காக இன்னொரு கடவுளை நாட வேண்டும்? எந்தவொரு பிணைப்பிலிருந்தும் உன்னை விடுவிக்கச் செய்திடும் காதலில் நீ ஆழவேண்டும் அன்பு என்பது ஆன்மாவுக்குரிய ஒளி காலையின் இன்சுவை நான் இல்லை நாம் இல்லை நமது இருப்பிற்கான எந்த உரிமை கோரலும் அங்கில்லை. இந்த வார்த்தைகள் நெருப்பை விட்டு வெளியேறும் புகையைப் போல அதன் குறைகளை போக்குகிறது மௌனமாக கண்ணீர் விடும் கண்களும் முகமும் காதலை சொல்ல முடியாது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
துன்பம் உன்னால்தான் என்று எண்ணுகிறாய் ஆனால் நீ தான் மருந்து. நீ கதவின் பூட்டு என்று நினைக்கிறாய் ஆனால் நீதான் அதைத் திறக்கும் திறவுகோல் நீ வேறொருவராக இருக்க விரும்புவது மிகவும் மோசமானது உன் முகத்தை உன் அழகை நீ பார்க்கவில்லை ஆனாலும் எந்த முகமும் உன்னுடைய இந்த முகத்தைவிட அழகாக இல்லை.
Jalal ad-Din Muhammad ar-Rumi
இன்றிரவு உறங்கப் போகாதே ஓர் இரவு ஒரு இலட்சம் ஆன்மாக்களின் மதிப்புடையது இரவு தாராளமானது அது உங்களுக்கு முழு நிலவைப் பரிசாகக் கொடுக்கலாம் அது முடிவில்லாத செல்வத்துடன் உங்கள் ஆன்மாவை ஆசீர்வதிக்கும் ஒவ்வொரு இரவும் இவ் உலகம் நியாயமற்றது என நீங்கள் உணரும்போது உங்களுடைய ஆன்மாவை அமைதிப்படுத்த முடிவில்லாத அருள் விண்ணிலிருந்து இறங்குகிறது. பகலைப் போல இரவில் நெரிசல் இல்லை இரவு நித்திய அன்பால் நிரம்பியுள்ளது. நீங்கள் பிரியத்திற்குரிய ஒரு பெண்ணை அணைத்துக் கொள்வதைப் போல் இந்த இரவை உங்கள் கைகளில் இறுக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். வாழ்வின் ஜீவநீர் இருண்ட குகைகளில் இருப்பதை நினைவில் கொள்க. ஒரு சிறிய வாய்க்காலின் வாயிலில் நிற்பதன் மூலம் வாழ்க்கையின் ஓட்டத்தை நிறுத்தும் பெரிய மீனைப் போல இருக்காதே! மனிதர்களது ஆன்மாவிற்கு அருள விண்ணகமும் தயாராக இருப்பதைக் காட்டும் விதமாக மக்காவும் கூட கருப்பு ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒரு இரவு நேரத்தில் ஞானம்பெற்ற தீர்க்கதரிசி அனைத்து சிலைகளையும் உடைத்து வீசியதும் கடவுள் தனியாக இருந்தார் முடிவில்லாத அன்பை அனைவருக்கும் சமமாக வழங்குவதற்காக.
Jalal ad-Din Muhammad ar-Rumi
ஒவ்வொரு மரத்தின் இலையும் கண்ணுக்கு தெரியாத உலகத்திலிருந்து ஒரு செய்தியைக் கொண்டு வருகிறது கவனியுங்கள், உதிரும் ஒவ்வொரு இலையும் ஒரு வரம்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நேசர் என் காதில் இரகசியமாகக் கிசுகிசுக்கிறார் வேட்டையாடுவதை விட இரையாக இருப்பது நல்லது. உன்னைக் கேள்வியின்றி எனக்கு ஒப்புக்கொடு. சூரியனாக இருக்க முயல்வதை நிறுத்திவிட்டு ஒரு புள்ளியாக சுருங்கிவிடு! என் வாசலில் தவழ்ந்தவாறு வீடின்றி வாழப் பழகு. மெழுவர்த்தியாக பாவனை செய்யாதே விட்டில் பூச்சியாக இரு அதன் மூலமாக வாழ்வின் சுவையை உய்த்துணர்வதோடு அல்லாமல் சேவை செய்வதில் மறைந்திருக்கும் ஆற்றலையும் நீ அறிந்துகொள்வாய்!
Jalal ad-Din Muhammad ar-Rumi
அன்பை அங்கு பேரம் பேச முடியாது. தேர்வு உங்களுடையதும் அல்ல. காதல் ஒரு கண்ணாடி அது உங்கள் சாரத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. உள்ளத்துணிவு இருப்பின் அதன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கலாம். சரணடையத் தயாராக உள்ளவர்களின் வறண்ட உதடுகளுக்கு இருளை பார்வையாக குரூரத்தை இரக்கமாக தூசியை விலைமதிப்பற்ற தூபமாக மாற்றுகிற அந்த மதுவை அன்பு கொண்டு வரும். நேசிப்பது என்றால் வானத்தை எட்டுவது ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு நூறு முகத்திரைகளை கிழித்தெறிவது. அன்பு என்றால் அகங்காரத்திலிருந்து விலகி அடியெடுத்து வைப்பது உள்நோக்கிய பார்வைக்காக வேண்டி கண்களைத் திறப்பது மேலும் இவ்வுலகத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமலிருப்பது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
என் மனதை உடையச்செய்து வேதனையால் என்னை மேலும் துன்புறுத்தாதீர்கள்' என் அன்பரிடம் வேண்டினேன். 'நான் உன்னை உடையச் செய்திடவில்லை என்றால் உன் ஓட்டிற்குள்ளாக ஒரு முத்தைப் போல நீ மறைந்தேயிருப்பாய்' அவர் பதிலிறுத்தார்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நான் ஒரு அணு நீங்கள் எனக்கு சூரியனின் முகம் போன்றவர் நான் காதல் பிணியாளன் நீங்கள் எனக்கு மருந்து போன்றவர் சிறகுகள் இல்லாமல் இறகுகள் இல்லாமல் நான் உங்களைத் தேடி பறக்கிறேன் நான் ரோஜா இதழாக மாறிவிட்டிருப்பவன் நீங்களோ எனக்கு காற்றைப் போன்றவர் என்னை ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
பகல் முழுக்க யோசித்திருப்பேன் அதைப்பற்றி. இரவில் சொல்லிவிடுகிறேன் அதை. எங்கிருந்து வந்தேன் நான்? எதைச் செய்யவேண்டும் நான்? பிடிபடவில்லை எனக்கு. ஆனால் நானறிவேன் எனது ஆன்மா வந்தது வேறெங்கோ இருந்து அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான். வேறேதோ மதுபான விடுதியிலிருந்து பிறந்திருக்கிறது இந்தப் போதை, நான் அங்கு மீளும்போது முற்றிலும் தெளிவடைந்திருப்பேன். இப்போது இந்த கூட்டில் அமர்ந்திருக்கும் நான் வேறோர் நிலவுலகின் பறவை. நான் பறந்து வெளியேறும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆனால் எனது குரலுக்கு எனது காதினுள் செவிமடுப்பவர் யார்? எனது உதடுகள் வழி வருவது எவரது வார்த்தைகள்? எனது கண்கள் வழியே பார்ப்பவர் யார்? அந்த ஆன்மா எது? கேட்காமலிருக்க முடியவில்லை என்னால். பதிலின் ஏதோ சிறுதுளி ருசிக்கக் கிடைத்தால் போதும் எனக்கு. போதையுற்றவர்களின் இந்தச் சிறையை உடைத்துக் கிளம்பிவிடுவேன். நானாக வரவில்லை இங்கு திரும்பிச் செல்வதற்குமில்லை அப்படியே. அழைத்து வந்தவரே என்னைத் திரும்ப இட்டுச் செல்லட்டும். இந்த கவிதை. என்ன சொல்லப்போகிறேன் என்று ஒருபோதும் எனக்குத் தெரியாது. திட்டமிட்டதுமில்லை. அதைச் சொல்வதைத் தவிர்த்ததோர் வெளியில் சஞ்சரித்திருப்பேன் நான் மௌனமாக.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
நரகத்தில் உனது கூந்தல் சுருளை என்னால் தொட முடிந்தால், சுவர்க்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் நிலை குறித்து நான் வெட்குவேன். நீயின்றி, நான் மட்டும் விண்ணகத்தின் வயல்களுக்கு அழைக்கப்படுவேனாயின் அப் பரந்த வெளி என் இதயத்திற்கு மிகவும் குறுகிய ஒன்றாக இருக்கும். நீயில்லாத சொர்க்கம் என்பது எனக்கு நரகமும் எதிரியுமாகும் அந்த அபாயகரமான மிளிர்வினால் நான் எரிக்கப்பட்டேன் அதுவே நித்தியத்தினுடைய வெளிச்சத்தின் மகிமை.
Jalal ad-Din Muhammad ar-Rumi
சரி தவறு என்பதற்கு அப்பாற்பட்டதொரு வெளி உண்டு. அங்கு சந்திப்பேன் உன்னை. புல்வெளியின் மீது ஆன்மா கவிந்திருக்கும்போது எதையும் பேசவியலாதபடி ததும்புகிறது இப்பிரபஞ்சம். மொழி எண்ணம் ஏன் 'ஒருவருக்கொருவர்' எனும் பதம் கூட பொருளற்றுப் போகிறது அங்கே.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
எஜமானரைப் பாராமல் கழியும் எந்த ஒரு பிறவியும் மாறுவேடத்திலிருக்கும் மரணம் அல்லது ஆழ்ந்த உறக்கம். உன்னை மாசுபடுத்தும் நீரானது உனக்கு விஷம். உன்னை தூய்மையாக்கும் நஞ்சோ உனக்குத் தண்ணீர்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நீங்கள் எல்லோரும் எண்ணுகிறீர்கள் மழையென்று. அல்ல சில சமயங்களில் தமது முகத்திரைக்குப் பின்னால் தேவதைகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நீங்கள் எந்த சித்திரத்தை வரைந்தாலும் அல்லது நீங்கள் எழுதும் கவிதை எதுவென்றாலும் அவர் அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவர். நீங்கள் எந்த உயரத்தை அடைந்தாலும் அவர் உங்களுடைய அந்த 'உயரத்தை' விடவும் உச்சமானவர். உங்களது பேச்சிலிருந்தும் நூல்களிலிருந்தும் விடுபட்டு விலகியிருங்கள். அவரே உங்களுடைய ஒரே புத்தகமாக ஆகட்டும். அது சாலவும் சிறந்தது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நீ என் நெஞ்சில் நடம்புரியும் ஆனந்தம். மற்றவர்களிடமிருந்து மறைக்கப்பட்ட என் ரகசியக் காதல். சில சமயங்களில் பணப்பையை விட்டு வெளியேறும் கஞ்சனின் நாணயம் போல நீ தப்பித்து என்னில் கவிதையை பிறப்பிக்கிறாய்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
அறிவினால் ஒருகாலும் புரிந்து கொள்ளவியலாதது அந்த இறுதிப் பரவசம். ஒரு சிந்தனையாளனை அவனது கடவுளிடம் கூட்டி வருவதென்பது கண்ணிழந்த ஒருவனைக் காணச் செய்வது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
முடிவில்லாத நூறு நாட்களைகூட நீங்கள் ஒன்றாகக் கோர்க்கலாம் எனினும் இந்த வலியிலிருந்து என் ஆன்மா எந்த ஆறுதலையும் காணாது. என் கதையைப் பார்த்து நீங்கள் சிரிக்கிறீர்களா? நீங்கள் படித்தவராக இருக்கலாம் ஆனால் பைத்தியம் பிடிக்கும் வரை நேசிப்பதற்கு நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை.
Jalal ad-Din Muhammad ar-Rumi
இந்த விஷத்தைக் காட்டிலும் இனிப்பான மதுவை இதுவரை நான் சுவைத்ததில்லை. இந்த நோயை விடவும் எந்த ஆரோக்கியமும் இவ்வளவு இனிமையாக இருக்காது! அன்பின் இந்த பாவத்தைப் பார்க்கிலும் எந்த பக்தியும் சிறந்தது அல்ல. இந்த தருணத்துடன் ஒப்பிடும்போது இத்தனை வருடங்களும் ஒரு கணம்தான்!
Jalal ad-Din Muhammad ar-Rumi
பாதி சிவப்பு பாதி மஞ்சள் நிறமான ஒரு சிறிய கலப்பின ஆப்பிள் இந்தக் கதையைச் சொல்கிறது. காதலனும் காதலியும் பிரிந்துவிடுகிறார்கள். அவர்கள் பிரிந்திருப்பது என்பது ஒரே விஷயம் ஆனால் அவை எதிரெதிரான எதிர்வினைகளைக் கொண்டுள்ளன. காதலன் வலியை உணர்ந்து வெளிறிப்போகிறான். காதலியோ சிவந்து பெருமிதம் கொள்கிறாள். என் எஜமானரின் ரோஜாவுக்கு அருகிலிருக்கும் ஒரு முள் நான். நாங்கள் இருவராகத் தெரிவோம், ஆனால் அவ்வாறில்லை நாங்கள் ஒருவரே!
Jalal ad-Din Muhammad ar-Rumi
அனைவருமே மரணத்திற்கு அதிகமாக அஞ்சுகிறார்கள் ஆனால் உண்மையான சூஃபிகளோ அதைக் கண்டு சிரிக்கிறார்கள். அவர்களின் இதயங்களை எதுவும் சித்திரவதை செய்வதில்லை. சிப்பியின் ஓட்டினை தாக்குவது ஒருபோதும் முத்தினை சேதப்படுத்தாது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நான் பைத்தியக்காரத்தனத்தின் விளிம்பில் வாழ்கிறேன். அனைத்திற்கும் காரணங்களை அறிய விரும்பியவனாக ஒரு கதவை தட்டுகிறேன். அது திறக்கிறது. நான் தட்டிக் கொண்டிருந்ததோ உள்ளே இருந்து.
Jalal ad-Din Muhammad ar-Rumi
உனக்கு எது வேண்டுமென அறியத் தவறினேன் நான். எனது வழித்தடத்தை அடைத்துவிடுகிறாய் நீ. ஓய்வும் கொடுப்பதில்லை ஒருபோதும் நீயெனக்கு. என்னைச் செலுத்தும் கண்ணியை ஒருவசத்தில் இழுக்கிறாய் நீ. பிறகோ மறுவசத்தில். எதுவும் நடவாதது போல நடிக்கவும் தெரிகிறது உனக்கு, எனது காதலே! நான் சொல்வது உனக்குக் கேட்கிறதா? நான் பிதற்றித்திரியும் இந்த இரவு முடியவும் கூடுமோ? உன்னைப்பற்றி ஏன் எனக்கின்னும் தயக்கமும் கூச்சமும்? பல்லாயிரங்களும் நீ. ஒன்றேயாகி நிற்பதுவும் நீ. அமைதி பூண்டபோதும், மிகத்தீர்க்கமாக வெளிப்படுத்துவதும் நீயே. வசந்தம் உனது பெயர் திராட்சைமது உனது பெயர் மதுவின் கிறக்கமும் மயக்கமும் உனது பெயரே! எனது மறைதிரையும் நீ. கண்ணின் ஒளிச்சுடரும் நீ. எங்கெங்கு காணினும் உனது பிம்பமே! இருப்பினும் உன்னிடம் வந்தடையவே ஏங்கித் தவிக்கிறேன் நான். எங்கு சிங்கத்தின் மீது மான் பாய்கிறதோ, எங்கு நான் தேடிக்கொண்டிருக்கும் ஒன்று என்னைத் தேடுகிறதோ, அங்கு வரக்கூடுமோ என்னால்? முழங்கியபடியே இருக்கின்றன, இந்த முரசும் இந்த வார்த்தைகளும்! தங்களது கவசங்களை உடைத்துக்கொண்டு அவை சிதறட்டும் மௌனத்தினுள்.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் இதமான சொற்கள் சொர்க்கத்தின் பெட்டகங்களில் இரகசியமாக மூடி வைக்கப்படுகின்றன ஒரு நாள் மழை போல் பூமியில் பொழிந்திடும் அவை பசுமையாக உலகம் முழுவதும் பற்றிப் படரும்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
இதயத்திலிருந்து இருத்தலின் முள்ளை வெளியே இழுங்கள். வேகமாக! அவ்வாறு செய்யும்போது ஆயிரக்கணக்கான ரோஜா தோட்டங்களை நீங்கள் உங்களுக்குள்ளாக காண்பீர்கள்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
ஆம் அந்த ரோஜா மறைந்துவிட்டது அதன் முள்ளை இருக்கட்டுமென என்னிடமே விட்டுவிட்டு.
Jalal ad-Din Muhammad ar-Rumi
புத்திசாலி எப்போதும் வெளிக்காட்டிக் கொள்கிறான். காதலனோ எப்போதும் தன்னை மறைத்துக் கொள்கிறான். மூழ்கிப்போய்விடுவோமென அஞ்சி அறிவாளி விலகி ஓடுகிறான். காதலின் மொத்த விவகாரமும் கடலில் மூழ்கிப் போவதுதான். புத்தியுள்ளவர்கள் தங்கள் ஓய்வைத் திட்டமிடும்போது காதலர்களோ ஓய்வெடுக்க வெட்குகிறார்கள். கூட்டத்தின் நடுவிலும் காதலன் தனித்திருக்கிறான் தண்ணீரிலிருந்து எண்ணெய் போல அவன் பிரிந்து நிற்கிறான். ஒரு காதலனுக்கு அறிவுரை கூற முற்படும் மனிதர் அடைவது ஒன்றுமில்லை. அவர் அவனுடைய ஆர்வத்தால் கேலி செய்யப்படுகிறார். காதல் மணக்கும் கஸ்தூரி போன்றது அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது காதல் ஒரு விருட்சம் காதலர்களே அதன் நிழல்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
சூஃபியானவர் வேட்டைக்காரன் ஒருவனைப் போல வேட்டையாடுவதைத் தேர்ந்தெடுத்து மானின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறார். அந்தச் சுவடுகளின் வரைபடத்தைக் கொண்டு அதன் பாதையைக் கண்டறிய அவர் முனைகிறார். ஆனால் மெய்யாகவே அந்த மான் தான் அவருக்கு வழி காட்டுகிறது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நீண்ட பொழுதாக நீயென்னைக் காத்திருக்க செய்தாய் உன்னைக் காணாமல் இருப்பதற்கு இவ்வளவு காலமாக பழகிவிட்டேன். நெடு நாட்களுக்குப் பிறகு என்னை நாடி வந்திருக்கிறாய் நானிப்போது உன்னை நேசிப்பதை காட்டிலும் உனக்காகக் காத்திருப்பதையே அதிகமாக விரும்புகிறேன்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
பைத்தியக்காரத்தனமாக உன்னை நேசிக்கிறேன் எனக்கு அறிவுரை கூறுவதால் எந்தப் பயனுமில்லை காதலின் நஞ்சினை சுவைத்திருக்கிறேன் உங்கள் வைத்தியத்தால் எனக்கு என்ன பயன்? உன்னைத் தேடிச் செல்ல முடியாதபடி என் கால்களைக் கட்ட விரும்புகிறார்கள். உன் பின்னால் ஓடிவருவது எனது இதயம் என்பதை அறியாதவர்கள் அவர்கள்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
அன்பின் இரத்தக் கறை படிந்த திரைகளுக்குப் பின்னால் காதலர்கள் உலவிடும் பூந்தோட்டங்கள் உள்ளன. மனம் தடையரண்களை மட்டுமே காணுமிடத்தில் காதலுக்கு அங்குள்ள இரகசிய வழி புலனாகும். உள்ளம் லாபத்தை யூகித்து விரைவாக கடையை அமைக்கும்போது அன்போ அறிவிக்கப்படாத பெருஞ்செல்வத்தை அதற்கும் அப்பால் காண்கிறது. எல்லாவற்றையும் அறிந்த மனம் முட்களை மாத்திரமே காணும் வேளையில் காதலர்களோ தங்கள் இதயத்தின் செல்வத்தை நம்புகிறார்கள். பூந்தோட்டத்தில் நீங்கள் நெடுக அலைய விரும்பினால் உங்கள் இதயத்திலிருந்து முட்களை முழுவதுமாக அகற்றிவிடுங்கள்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
மிக உயர்ந்த உண்மையை அறியும் ஆற்றலை அவனுக்கு அளித்தீர்கள் உமது உயிரின் ஒரு மூச்சால் இவ் உலகத்தின் தளைகளிலிருந்து அவனை விடுவித்தீர்கள். ஓ அன்பே, ஓ இதயமே சொர்கத்திற்கு வழி தேடுங்கள் கடவுளின் மேய்ச்சல் நிலத்திற்கு வழி காணுங்கள். கால்நடைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் புல்வெளியில் நீங்கள் நிறையவே நேரத்தை செலவிட்டுவிட்டீர்கள். உங்கள் கண்கள் காணமுடிவதை விடவும் உயரமான ஒரிடத்தில் உங்கள் பார்வையை செலுத்துங்கள் ஏனெனில் அதுவே உயர்ந்த நோக்கமாக இருந்தது அது உங்களை இங்கு அழைத்து வந்தது முதல் இடத்திற்கு. இப்போது அமைதியாக இரு வார்த்தைகளை உருவாக்குபவர் பேசட்டும் அவர் கதவைச் செய்தார் அவர் பூட்டை உருவாக்கினார் சாவியையும் தயாரித்தார்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
நான் உன்னிடம் நீ அழகாய் இருக்கிறாய் என்று கூறும்போது நீ என்னை நம்பவில்லை நீ மிகவும் அந்தரங்கமாக அறிந்திருந்த கறைகள் காரணமாக. ஆனால் அந்த கறைகள் நீ அனுபவித்த துயரத்தின் வடுக்கள் நீண்ட கோடை புற்களில் பூத்திருக்கும் டெய்ஸி மலர்கள் போல அவை உன் ஆன்மாவிலிருந்து ஒளிரும் அழகுடன் பிரகாசிக்கின்றன. எனவே நான் உன்னிடம் 'கண்களை மூடியிருந்தாலும் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்பதை நான் இன்னும் பார்க்கிறேன்' என்று கூறும்போது அது உண்மை. அதை நம்பவும். அதை நம்பவும்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
உங்கள் வேட்கையின் அமுதை பருகிய ஆன்மா எதுவொன்றும் மேன்மையுற்றது. அந்த ஜீவநீரை அருந்தியதிலிருந்து அது களிகூர்ந்த நிலையில் இருக்கிறது. மரணம் வந்து என்னை முகர்ந்து பார்த்தது உன் நறுமணத்தை பதிலுக்கு உணர்ந்தது. அன்று முதல் மரணம் என் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
மாற்றத்திற்காக வேண்டினேன் அதனால் என் மனதை மாற்றிக்கொண்டேன் நான் வழிகாட்டுதலுக்காக ஜெபித்தேன் என்னை நம்பவும் கற்றுக்கொண்டேன் நான் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன் நான் என் அகங்காரம் அல்ல என்பதை உணர்ந்தேன் நான் அமைதிக்காக பிரார்த்தனை செய்தேன் மேலும் நிபந்தனையின்றி மற்றவர்களை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டேன் மிகுதியாக வேண்டிக்கொண்டேன் என் சந்தேகம் அதை வெளியில் வைத்ததை உணர்ந்தேன் செல்வம் வேண்டி நின்றேன் அது என் உடல்நிலை என்பதை உணர்ந்தேன் நான் ஒரு அதிசயத்திற்காக தொழுகை செய்தேன் நானே ஒரு அதிசயம் என்பதை உணர்ந்தேன் நான் ஒரு ஆத்ம துணைக்காக பிரார்த்தனை செய்தேன் நான் ஒருவருடன் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அன்பிற்காக வேண்டிக்கொண்டேன் அது எப்போதும் கதவைத் தட்டுகிறது என்பதை உணர்ந்தேன் ஆயினும் நான் அதை உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
the sweetheart in my dream last night had the soul and body of a silver sea asking everyone today as i seek hoping again to find longing again to see
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Love Poems of Rumi)
ALL I’VE ASKED FROM YOU all i’ve asked from you is you and you again from your love i’ve already spread our feast i don’t remember what i dreamt last night all i know is i woke up drunk
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Love Poems of Rumi)
sweetheart i see myself very close to you like earth i welcome your every step is it fair to call you my entire world and yet not find you around
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Love Poems of Rumi)
it’s your voice making me sing so fine hearing your call and i’m generous like God you’ve owned me a hundred times buy me once more give me a new life
Jalal ad-Din Muhammad ar-Rumi (The Love Poems of Rumi)
கவிதைகளின் உள்ளிருக்கும் துடிப்புகளைக் கேள் அவை விரும்பும் இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்லட்டும் உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளை தொடர்ந்து கொண்டே இரு அதன் அருகாமையை நழுவவிடாதே ஒரு போதும்.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
நீயொரு உண்மையான மனிதனெனில் எல்லாவற்றையும் பணயம் வை காதலுக்காக. இயலவில்லை எனில் சென்றுவிடு இங்கிருந்து. அரைகுறை மனதிற்கு அகண்டவெளி அகப்படாது. பேரருளை நோக்கி பயணிக்கத் தீர்மானித்த நீ, சிறுமைபடர்ந்த விடுதிகளில் நெடுங்காலம் இளைப்பாறிவிடுவது ஏன்?
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு. ஓர் ஆனந்தம் சற்று மனச்சோர்வு சிறிது அற்பத்தனம் நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு - எதிர்பாராத விருந்தாளியாக அவ்வப்போது வந்துசெல்லும். எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு! துக்கங்களின் கூட்டமாக அவை இருந்து உனது வீட்டைத் துப்புரவாக வெறுமைப்படுத்தும் போதும், ஒவ்வொரு விருந்தினரையும் கௌரவமாக நடத்து. புதியதோர் உவகைக்காக அவை உன்னை தூசிதட்டித் தயார்படுத்தக்கூடும். வக்கிரம் அவமானம் வஞ்சனை இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக. வருபவர் எவராயினும் நன்றி செலுத்து. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள் தொலைதூரத்திற்கு அப்பாலிருந்து.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
திரும்பத்திரும்ப கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதால் தெளிவுறப் போவதில்லை அப்புதிரின் சூட்சுமம், வியப்பூட்டும் பிரதேசங்களுக்கு பயணிப்பதாலும்கூட. உனது குழப்பம் விலகப் போவதில்லை எப்போதும், ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கேனும் உனது கண்களையும் தேடலையும் சலனமற்றுக் காத்திருக்கச் செய்தாலன்றி.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
காதலின் வழி நுட்பமான விவாதமல்ல. பிரளயமே அங்கு செல்வதற்கான வாயில். தங்களது சுதந்திரத்தைப் பெருவானில் வட்டமிட்டு களிப்பெய்துகின்றன பறவைகள். அவை எப்படிப் பயில்கின்றன பறத்தலை? அவை விழுகின்றன. அவ்வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
உனக்குத் தகுந்த ஒரு பரிசைத் தேடிக்கொண்டு வருவதற்காக, நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்று உனக்குத் தெரியாது. எதுவும் உகந்ததாகத் தோன்றவில்லை. கனிமச் சுரங்கம் ஒன்றிற்கு தங்கத்தையும் அல்லது கடலுக்கு நீரையும் சுமந்து வருவதால் என்ன பயன்? கீழைத் தேசங்களுக்கு நறுமணத் திரவியங்களை ஏற்றிச் செல்வதைப்போல ஒரு மதிப்புமில்லாதவையே, உனக்காக வேண்டி நான் எடுத்து வர எண்ணியவையும். என் இதயத்தையோ அல்லது ஆன்மாவையோ தருவதிலும் யாதொரு பயனுமில்லை! ஏனென்றால் ஏற்கனவே இவை உன்னிடம்தான் உள்ளன. எனவே உனக்கொரு கண்ணாடியைக் கொண்டு வந்துள்ளேன். உன்னைப் பார்த்து என்னை நினைவுகொள்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
என் வாழ்வின் தொடக்கத்திலிருந்து உன் முகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் ஆயினும் இன்று நான் அதைக் கண்டேன். நான் தேடிக்கொண்டிருந்த வசீகரமும் அழகும் புரிந்துகொள்ள முடியாத கருணையும் கொண்ட அந்த முகத்தினை இன்று பார்த்தேன். இன்று நான் உன்னைக் கண்டடைந்ததும் நேற்று வரை சிரித்தவர்கள் என்னைத் தூற்றியவர்கள் நான் தேடியதைப் போல தாமும் தேடவில்லையே என்று வருந்துகிறார்கள். உன் அழகின் மகத்துவத்தைக் கண்டு திகைத்து நிற்கும் நான் நூறு கண்கள் கொண்டு உன்னைப் பார்க்க விரும்புகிறேன். என் இதயம் உணர்ச்சி மிகுதியால் பற்றி எரிந்துகொண்டிருந்தது நான் இப்போது கண்டிடும் இந்த அற்புதமான அழகினை அது என்றென்றும் தேடிக்கொண்டிருந்தது. இந்த நேசத்தை மனித இயல்பு என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் தவிரவும் இதை தெய்வீகம் என்று கூறிடவோ கடவுளை எண்ணி அஞ்சுகிறேன். உனது வாசனை மூச்சு காலைக் காற்று போல தோட்டத்தின் அமைதியுள் கலந்துவிட்டது நீ எனக்கு புத்துயிர் கொடுத்தாய் நானோ உனக்கு கதிர் ஒளியாகவும் உற்ற நிழலாகவும் ஆகிவிட்டேன். என் உள்ளம் பரவசத்தில் அரற்றுகிறது என் இருப்பின் ஒவ்வொரு இழையும் உன்னில் காதலுற்றிருகிறது. உன் பிரகாசமானது எனது இதயத்தில் ஒரு நெருப்பை மூட்டியுள்ளது எனக்காக நீ இந்த பூமியையும் வானத்தையும் மேலும் ஒளிரச் செய்தாய். என் காதல் கணை அதன் இலக்கை அடைந்துவிட்டது நான் நற்கருணையின் இல்லத்தில் இருக்கிறேன் எனது இதயமோ இப்போது பிரார்த்தனை செய்யும் இடமாகிறது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
ஒரு காலத்தில் எனக்கு ஆயிரம் ஆசைகள் இருந்தன. ஆயினும் உன்னை அறிய வேண்டும் என்னும் எனது ஒரு விருப்பத்தில் அவை அனைத்தும் கரைந்தன. உனது இருப்பின் தூய்மையான சாரம் என் இதயத்தையும் ஆன்மாவையும் கொள்ளைகொண்டது. இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது ஆசை என எதுவும் இல்லை, உனது இனிமையான அழுகையின் ஒலி மட்டுமே உள்ளது. உன்னுடைய அருளால் எனக்குள் ஒரு புதையலை நான் கண்டேன். காணாத உலகத்தின் உண்மையை நான் கண்டேன். நித்தியமானதொரு பரவசத்தில் நான் ஆழ்ந்துபோனேன். காலத்தின் அழிவுகளை நான் கடந்துவிட்டேன். நான் உன்னுடன் ஒன்றாகிவிட்டேன் ! இப்போது என் இதயம் "உலகின் ஆன்மா நான்" எனப் பாடுகிறது.
Jalal ad-Din Muhammad ar-Rumi
ஒரு விளக்கு அல்லது ஒரு உயிர்காக்கும் படகு அல்லது ஒரு ஏணியாக இருந்து ஒருவரின் ஆன்மாவை குணப்படுத்த உதவுங்கள். உங்கள் வீட்டை விட்டு ஒரு மேய்ப்பனைப் போல வெளியேறுங்கள். புனிதமான தீயின் நடுவே அது உங்களைச் சமைக்கும் மட்டும் ஆற்றியிருங்கள். ஆண்டவரின் உணவு மேசையில் நன்றாகச் சுடப்பட்ட ரொட்டியாக இருங்கள். வாருங்கள் வந்து உங்கள் சகோதரர்களுக்கு பரிமாறுங்கள். நீங்கள் வலிக்கு காரணமாக இருந்தீர்கள். இப்போதோ நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் பாதுகாப்பற்ற வீடாக இருந்தீர்கள். இப்போதோ நீங்கள் கண்ணுக்கு தெரியாததையும் காணும் ஒருவராக இருப்பீர்கள். நான் இதைச் சொன்னதும் என் காதில் ஒரு குரல் வந்து சொன்னது நீங்கள் இதுவாக மாறினால், நீங்கள் அதுவாக இருப்பீர்கள்! பிறகு அமைதி, இப்போதோ அதிக அமைதி. பேசுவதற்கு அல்ல வாய். இந்த இனிப்பை ருசிப்பதற்கே வாய்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
உன்னை காதலிக்க மௌனத்தை நான் தேர்வுசெய்கிறேன். மௌனத்தில் நிராகரிப்பு எதையும் நான் காணவில்லை. உன்னைக் காதலிக்கத் தனிமையை நான் தேர்வுசெய்கிறேன். தனிமையில் என்னைத் தவிர வேறு யாருக்கும் நீ சொந்தமில்லை. உன்னை வணங்க தொலைவான தூரத்தை நான் தேர்வுசெய்கிறேன். தூரம் என்னை வலியிலிருந்து பாதுகாக்கும். உன்னை முத்தமிட காற்றினை நான் தேர்வுசெய்கிறேன். காற்று என் உதடுகளைவிடவும் மென்மையானது. உன்னை வைத்திருக்க கனவினை நான் தேர்வுசெய்கிறேன். ஏனென்றால் என் கனவுகளில் உனக்கு முடிவே இல்லை.
Jalal ad-Din Muhammad ar-Rumi
இதுவொரு சிறிய ரோஜா மொக்கு மாத்திரமே, முழு மலரோ கடவுளின் உருவாக்கம். ஆயினும், என்னுடைய இந்த அழுக்கான கைகளால் அதன் இதழ்களை விரியச் செய்திட முடியாது. பூக்கள் மலரும் ரகசியம் என் போன்றவர்களுக்குத் தெரியாது. கடவுள் இந்த பூவை மிகவும் மென்மையாக திறக்கிறார், என் கைகளில் இருக்கும் போதோ அவை வெளிறி வாடிவிடுகின்றன. மலர் என்பது கடவுளின் படைப்பு என்னால் ஒரு ரோஜா மொட்டை மலரச் செய்யமுடியாவிட்டால், பிறகெப்படி என்னுடைய வாழ்க்கையை விரித்தறியும் ஞானம் எனக்கு வாய்த்திருக்கிறது என்று நான் எண்ணவியலும்? எனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவருடைய வழிநடத்துதலுக்காக அவரை நம்புவேன். யாத்திரையின் ஒவ்வொரு அடியிலும் அவருடைய வழிகாட்டுதலுக்காக அவரை நோக்குவேன். எனக்கு முன்னால் இருக்கும் பாதையை, என்னைப் படைத்த அவர் மாத்திரமே அறிவார். அவர் ரோஜாவை விரியச்செய்வது போல. வாழ்வின் தருணங்களையும் மலரச் செய்திடுவார் என்று நம்புகிறேன்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
உன்மீது கொண்ட அன்பால் நான் இப்படித்தான் இறப்பேன்; மேகத்தின் துண்டுகள் சூரிய ஒளியில் கரைந்து மறைவது போல. உன் குரலைத் தவிர எனது காதில் எதுவும் விழவில்லை. இதயம் தன்னுடைய வாய்ஜாலத்தால் மனதைக் கொள்ளையடித்துவிட்டது. ஒரு வெற்றுப் பக்கத்தில் வெளிப்படையான கையெழுத்தில் காதல் எதையோ எழுதுகிறது, ஆகவே என் ஆன்மா அதைப் படித்து நினைவுகூரவியலும். அன்பே, உன் மௌனத்திற்குள் என்றென்றுமாக நான் மறைந்து போகும் அந்த நல் அதிர்ஷ்டத்தை எனக்கு வழங்குவாயாக!
Jalal ad-Din Muhammad ar-Rumi
அறிவார்ந்த தேடலானது முத்தையும் பவளத்தையும் போல நேர்த்தியானது. ஆனால் அது ஒருபோதும் ஆன்மீகத் தேடலுக்கு ஒப்பாகாது. ஆன்மாவின் தேடல் முற்றிலும் வேறொரு தளத்திலானது. ஆன்மத் தேறலானது நுட்பமான சுவை கொண்டது. புத்தியும் புலன்களும் காரணத்தையும் விளைவையும் ஆராயும். ஆன்மாவைத் தேடுபவரோ ஆச்சரியத்தின் முன் சரண்டைகிறார்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
அறிவார்ந்த தேடலானது முத்தையும் பவளத்தையும் போல நேர்த்தியானது. ஆனால் அது ஒருபோதும் ஆன்மீகத் தேடலுக்கு ஒப்பாகாது. ஆன்மாவின் தேடல் முற்றிலும் வேறொரு தளத்திலானது. ஆன்மத் தேறலானது நுட்பமான சுவை கொண்டது. புத்தியும் புலன்களும் காரணத்தையும் விளைவையும் ஆராயும். ஆன்மாவைத் தேடுபவரோ ஆச்சரியத்தின் முன் சரணடைகிறார்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
முடியுமானால் இதைக் கேளுங்கள். நீங்கள் அவரை அடைய விரும்பினால், உங்களைக் கடந்து நீங்கள் செல்ல வேண்டும். இறுதியாக இன்மையின் இடத்திற்கு நீங்கள் வரும்போது அமைதியாய் இருங்கள் ஒன்றும் சொல்லாதீர்கள் வார்த்தைகள் அல்ல, பரவசமே அங்கு பேசப்படும் மொழி.
Jalal ad-Din Muhammad ar-Rumi
உனது ஒளியில் கற்றுக்கொள்கிறேன் எப்படிக் காதலிப்பதென. உனது அழகில் எப்படிக் கவிதை செய்வது என்பதையும். எனது நெஞ்சினுள் நடனமிடுகிறாய் நீ. அங்கே காண்பதற்கில்லை எவரும் உன்னை. ஆயினும் காண்கிறேன் நான் அவ்வப்போது. அந்தத் தரிசனமே இந்தக் கலையாகிறது.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
சலிக்கவில்லை நீ எனக்கு. என்மீது பரிவுகாட்டிப் பரிவுகாட்டி நீயும் அலுத்துப்போகாதே. நீர்க்குடுவை நீர்க்கலயம் தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும் சோர்ந்து போயிருக்கும் நிச்சயம் என்னால். தாகங்கொண்ட மீனொன்று என்னுள் இருக்கிறது. ஒருபோதும் கூடவில்லை அதற்கு முழுத்தாகமும் தணிக்க. கடலுக்கு வழி எது? காட்டுங்கள் அதை எனக்கு! உடைத்தெறியுங்கள், இச்சிறு குவளைகளை அளந்து ஊற்றும் வீண் எத்தனங்களை. மனமுயகத்தையும் பெருந்துக்கத்தையும்கூட. நெஞ்சின் மையத்தில் யாருமறியா முற்றத்திலிருந்து நேற்றிரவு எழும்பிய அலையில் மூழ்கடிக்கப்படட்டும் எனது வீடு. ஒரு நிலவினைப்போல எனது கிணற்றினுள் விழுந்தார் ஜோசப். அடித்துச் செல்லப்பட்டது நான் காத்திருந்த விளைச்சல். ஆயினும் அதுவொரு பொருட்டல்ல. எனது கல்லறையின் மீது மூண்டுள்ளது நெருப்பு. படிப்பு கௌரவம் அல்லது மரியாதை இவையேதும் வேண்டாம் எனக்கு. இந்த இசை இந்தப் புலரி உன் கன்னக்கதுப்பு எனக்களிக்கும் வெதுவெதுப்பு இவைபோதும் எனக்கு. துக்கித்திருப்போர் பெரும் சேனைகளாகக் குழுமுவார்கள். நான் செல்லப்போவதில்லை அவர்களோடு. கவிதையை முடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இப்படித்தான் ஆகிறது, மாபெரும் மௌனம் என்மீது கவிகிறது. வார்த்தைகளைப் பயன்படுத்த ஏன் எண்ணினேன் என்ற தவிப்பே எஞ்சுகிறது.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
உனக்கென ரகசியங்களை பொதித்து வைத்திருக்கிறது காலைத் தென்றல். துயிலச் சென்றுவிடாதே மீண்டும். எதை உண்மையாக நீ விரும்புகிறாயோ அதை கேட்டுப் பெற்றுவிடு எப்படியும். துயிலச் சென்றுவிடாதே மீண்டும். அவ்வுலகும் இவ்வுலகும் தொட்டு உறவாடும் வாயிலின் வழியாக மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர். வட்டவடிவான அவ்வாயிலோ திறந்து கிடக்கிறது இப்போது. துயிலச் சென்றுவிடாதே மீண்டும்.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
உன்னோடு நான் இருக்கும்போது கண்விழித்த வண்ணம் கழிகிறது இரவு. நீ இங்கில்லை எனும்போதோ துயிலுற இயலவில்லை ஒருபோதும் என்னால். இவ்விரு துயிலொழிவுகளுக்காகவும் அவற்றின் வேற்றுமைக்காகவும் நாம் போற்றுவோம் கடவுளை!
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
இன்றும் ஏனைய நாட்களைப்போலவே வெறுமையோடும் பயத்தோடும் கண்விழிக்கின்றோம். படிப்பறைக் கதவை திறந்து வாசிக்கத் துவங்கவேண்டாம். இசைக்கருவி ஒன்றை மீட்டத் துவங்கு. நாம் விரும்பும் அழகு நாம் செய்யப் போவதிலிருக்கட்டும். மண்டியிட்டுத் தரையை முத்தமிட பலநூறு வழிகள் உண்டு.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
என்னை மிகவும் வசமிழக்கச் செய்துவிட்டாய் நீ. உனது அருகின்மை எனது காதலை பொங்கிப் பெருகச் செய்கிறது. எப்படியென்று கேட்காதே. பிறகு நீ எனதருகே வருகிறாய். 'வேண்டாமே...' என்கிறேன் நான். அதற்கு நீயோ 'வேண்டாமா...' என வினவுகிறாய். ஏனோ இது என்னைக் களிப்படையச் செய்கிறது. ஏனென்று கேட்காதே.
Jalal ad-Din Muhammad ar-Rumi (தாகங்கொண்ட மீனொன்று)
உன் அன்பிற்கு இவ் உலகம் இணையாகாது. உன்னை விட்டு விலகி இருப்பதென்பது என் ஆன்மாவை மரணத்திற்குப் பறிகொடுப்பதற்கு ஒப்பாகும். என் இதயமானது விலைமதிப்பற்றது நூறாயிரம் ஆன்மாக்களுக்காகவும் நானதை விற்க முன்வரமாட்டேன். ஆயினும் உனது ஒரு புன்னகைக்கு நீயதை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
எல்லா நாளையும் போலவே இன்றும் நாம் வெறுமையோடும் இனம் புரியாத அச்சத்தோடும் விழித்தெழுகிறோம். படிப்பறைக்கான கதவைத் திறந்து படிக்கத் தொடங்காதே. பதிலாக ஒரு இசைக்கருவியை தெரிவு செய். நாம் விரும்பும் அழகு நாம் செய்வதில் இருக்கட்டும். மண்டியிட்டு மண்ணை முத்தமிட நூற்றுக்கும் அதிகமான வழிகள் உண்டு.
Jalal ad-Din Muhammad ar-Rumi
அழகிய வடிவமுடைய அம் மனிதர் என்முன் தோன்றிபோது நான் அறிவைத் தேடிக்கொண்டிருந்தேன். அவரை வசீகரிக்க முயன்றவனாக, 'நேற்றிரவு எனக்கு ஒரு கனவு வந்தது தயவுசெய்து அதன் பொருளை எனக்கு விளக்குவீர்களா? நீங்கள்தான் எனக்கிருக்கும் ஒரே நம்பிக்கை.' என்று வினவினேன். தலையை அசைத்தவர் என்னை ஊடுருவி பார்க்க முடிந்தவரை போல் புன்னகைத்தார். 'என்னை வசீகரிக்க வீணாக முயற்சிக்காதே, உனது ஒவ்வொரு நுணுக்கத்தையும், ஒவ்வொரு நிறத்தையும் ஒவ்வொரு வாசனையையும் நானறிவேன். நானுன் கண்ணாடி.' அவரது கரங்களில் தங்க நூல் கொண்டு அவர் பின்னிடும் வடிவமாக மாறுகிறேன் அவருடைய ஆகச் சிறந்த படைப்பாக உயிர்த்திருக்கிறேன்.
Jalal ad-Din Muhammad ar-Rumi
There is a life-force within your soul, seek that life .There is a gem in the mountain of your body, seek that mine. O traveler, if you are in search of that, don't look outside, look inside yourself and seek that.
Jalal ad-Din Muhammad ar-Rumi
A king once said to a dervish, "When you enjoy glory and proximity at God's court, make mention of me." "When I am in that Presence," said the dervish, "and am exposed to the radiance of that Sun of Beauty, I am unable to make mention of myself, much less of you!
Jalal ad-Din Muhammad ar-Rumi
Do not grieve over past joys, be sure they will reappear in another form. A child’s joy is in milk and nursing but once weaned, it finds new joy in bread and honey. Joy appears in many different forms it moves from place to place. It may suddenly show in the falling rain or in the rose bed; it comes now as water, now as beauty, or as nourishing bread. But suddenly it may show its face from behind the veil and destroy all idols that prevent you from seeking the divine. In sleep when the soul leaves the body you may dream of yourself as a tall cypress or as a beautiful rose, but be warned, my friend, all these phantoms dissolve into thin air once the soul returns to the body. Do not rely on anything but your heart.
Jalal ad-Din Muhammad ar-Rumi (Rumi's Little Book of Life: The Garden of the Soul, the Heart, and the Spirit)
A moth is that thing that cannot resist the candle, no matter how much it suffers and burns in agony. Any animal that, like the moth, is unable to resist the candle's light and hurls itself at that light is a "moth". A candle into the light of which the moth throws itself but which does not burn the moth is not a "candle". Therefore, a man who can resist God and not strive with all his might to comprehend Him is not a man. A god one can comprehend is not God. "Man" then is that which is never free of striving; he is that which hovers restlessly around the "light" of God's Awesomeness. "God" is that which "burns" man and renders him nought but which no intellect can comprehend.
Jalal ad-Din Muhammad ar-Rumi
One actuality is better than a thousand chances.
Jalal ad-Din Muhammad ar-Rumi
wish that grief and sorrow would shatter your heart, disloyal lover, and deprive you of everything you value in the world. As no one remembers me but sorrow I bless it a thousand times a day.
Jalal ad-Din Muhammad ar-Rumi (Rumi's Little Book of Life: The Garden of the Soul, the Heart, and the Spirit)